Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : S. Dakshinamurthy

Male : Thiththikkum muthamizhae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Poompunal kaaveri thaai madi valarnthitta
Female : Poompunal kaaveri thaai madi valarnthitta
Male : Podhigai malai thandha selvamae

Male : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae

Male : Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai
Female : Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai

Male : Madhurai nagar sanga maadathil nee konda
Valathukkum eedinai illai

Female : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae

Male : Sillenum ilanthendral mella nadakkindra
Thendhisai mannil pirandhaai
Female : Thendhisai mannil
Male : Thendhisai mannil pirandhaai
Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai
Female : Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai

Male : Imayamalai thottu kumari munai varai
Iru kaiyum veesi nadanthaai
Female : Iru kaiyum veesi nadanthaai
Male : Iyal isai naadagam ena moondru kilai vittu
Yaavarum pottrida vaazhndhaai

Both : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : தித்திக்கும் முத்தமிழே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பெண் : பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
ஆண் : பொதிகை மலை தந்த செல்வமே…

ஆண் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை
பெண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை

ஆண் : மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட
வளத்துக்கும் ஈடிணை இல்லை..

பெண் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண் : சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற
தென்திசை மண்ணில் பிறந்தாய்
பெண் : தென்திசை மண்ணில்
ஆண் : தென்திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
பெண் : தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

ஆண் : இமயமலை தொட்டு குமரி முனை வரை
இரு கையும் வீசி நடந்தாய்
பெண் : இரு கையும் வீசி நடந்தாய்
ஆண் : இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு
யாவரும் போற்றிட வாழ்ந்தாய்…

இருவர் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here