Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Thookam kannilae yekkam pennilae
Thudikkum sithira kanni
Muthangal sindha vandhaal nerilae
Thookam kannilae yekkam pennilae
Thudikkum sithira kanni
Muthangal sindha vandhaal nerilae
Thookam kannilae yekkam pennilae

Female : Haa..aaa..aaa…aa..haa..aa
Laalallalala…lulululaaiyee
Paarthaal palingu vattam
Palapalakkum mugathilae
Pazhathil paadhi vetti
Paathi kattum idhazhilae

Female : Vaazhai pandhalittu
Vaithirukkum kaalilae
Vaadum idaiyai mattum
Katti veithaen noolilae
Ondrilae ondru nerungi nindru
Ondrilae ondru nerungi nindru
Engoo sendru varuvoom indru

Female : Thookam kannilae yekkam pennilae
Thudikkum sithira kanni
Muthangal sindha vandhaal nerilae
Thookam kannilae yekkam pennilae

Female : Vasal kadhavai mattum
Moodi veitha manidhanae
Kaadhal kadhavai mattum
Moodavillai iraivanae

Female : Dhratchai kani pizhindha
Paathirathin naduvilae
Dhinamum neendhi vandhaal
Yaar thaduppaar thalaivanae
Kannangal modha ullangal aada
Kannangal modha ullangal aada
Kannadi paarppom kaiyodu serppom..haa

Female : Thookam kannilae yekkam pennilae
Thudikkum sithira kanni
Muthangal sindha vandhaal nerilae
Thookam kannilae yekkam pennilae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே
துடிக்கும் சித்திரக் கன்னி
முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே
தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே
துடிக்கும் சித்திரக் கன்னி
முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே
தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

பெண் : …………

பெண் : பார்த்தால் பளிங்கு வட்டம்
பளபளக்கும் முகத்திலே
பழத்தில் பாதி வெட்டி
பாத்தி கட்டும் இதழிலே

பெண் : வாழைப் பந்தலிட்டு
வைத்திருக்கும் காலிலே
வாடும் இடையை மட்டும்
கட்டி வைத்தான் நூலிலே
ஒன்றிலே ஒன்று நெருங்கி நின்று
ஒன்றிலே ஒன்று நெருங்கி நின்று
எங்கோ சென்று வருவோம் இன்று

பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே
துடிக்கும் சித்திரக் கன்னி
முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே
தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

பெண் : வாசல் கதவை மட்டும்
மூடி வைத்தான் மனிதனே
காதல் கதவை மட்டும்
மூடவில்லை இறைவனே

பெண் : திராட்சைக் கனி பிழிந்த
பாத்திரத்தின் நடுவே
தினமும் நீந்தி வந்தால்
யார் தடுப்பார் தலைவனே
கன்னங்கள் மோத உள்ளங்கள் ஆட
கன்னங்கள் மோத உள்ளங்கள் ஆட
கண்ணாடி பார்ப்போம் கையோடு சேர்ப்போம் ..ஹா

பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே
துடிக்கும் சித்திரக் கன்னி
முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே
தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here