Singer : P. Susheela

Music by : B. A. Chidambaranathan

Lyrics by : Kumaradevan

Female : Thoonga veikkum iravellaam
Yenga veikkum iravamma
Naan vaangi vandha uravellaam
Naan vaangi vandha uravellaam
Vaatugindra uravamma

Female : Thoonga veikkum iravellaam
Yenga veikkum iravamma

Female : Nenjinilae konda sumai
Neengividum munnalae
Nenjinilae konda sumai
Neengividum munnalae
Vayittril oru pudhu sumaiyum
Valarudhamma ini
Indha sumai irangi vandhu
Amma endru azhaikaiyilae
Endha sumai vandhidumoo
Ammamma amma… amma…

Female : Thoonga veikkum iravellaam
Yenga veikkum iravamma

Female : Eendrathumae vettugiraar
Endraalum vaazhaimaram
Eenaamal thaaimai thanai verpathillaiyae
Eendrathumae vettugiraar
Endraalum vaazhaimaram
Eenaamal thaaimai thanai verpathillaiyae

Female : Muthedukkum nerathilae
Sethuvidum sippikooda
Muthai tharum thaaimai thanai veruppadhillaiyae
Penmaiyin muzhumaiyae thaaimai thaan endraalum
Perumaiyaaga magizha ennaal
mudiyavillaiyae
Amma…. amma

Female : Thoonga veikkum iravellaam
Yenga veikkum iravamma
Naan vaangi vandha uravellaam
Vaatugindra uravamma

Female : Thoonga veikkum iravellaam
Yenga veikkum iravamma

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பாடல் ஆசிரியர் : குமாரதேவன்

பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா
நான் வாங்கி வந்த உறவெல்லாம்
நான் வாங்கி வந்த உறவெல்லாம்
வாட்டுகின்ற உறவம்மா….

பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா

பெண் : நெஞ்சினிலே கொண்ட சுமை
நீங்கிவிடும் முன்னாலே
நெஞ்சினிலே கொண்ட சுமை
நீங்கிவிடும் முன்னாலே
வயிற்றிலொரு புதுச் சுமையும்
வளருதம்மா இனி
இந்தச் சுமை இறங்கி வந்து
அம்மா என்றழைக்கையிலே
எந்த சுமை வந்திடுமோ..
அம்மம்மா அம்மா அம்மா…

பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா

பெண் : ஈன்றதுமே வெட்டுகிறார்
என்றாலும் வாழைமரம்
ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே
ஈன்றதுமே வெட்டுகிறார்
என்றாலும் வாழைமரம்
ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே

பெண் : முத்தெடுக்கும் நேரத்திலே
செத்துவிடும் சிப்பிகூட
முத்தைத் தரும் தாய்மைதனை
வெறுப்பதில்லையே
பெண்மையின் முழுமையே
தாய்மைதானென்றாலும்
பெருமையாக மகிழ என்னால் முடியவில்லையே
அம்மா அம்மா…..

பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா
நான் வாங்கி வந்த உறவெல்லாம்
வாட்டுகின்ற உறவம்மா….
தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here