Singer : Ilayaraja

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Male : Thoongaatha niyaayangalae
Umakkeno indru meelaatha thookkangalae
Dharmangal ellaam ingu oomaiyaagi ponatho

Male : Thoongaatha niyaayangalae
Umakkeno indru meelaatha thookkangalae

Male : Sonthangal panthangal endrenni nee unnai
Siraiyaakki kondaayae silaiyaagi nindraayae
Oorengum ullorgal uravennum ennangal
Neeyaenum kondaayaa yaenendru kettaayaa

Male : Dharmaththin kangal munnae
Thaai enna pillai enna
Nee keladaa varum badhil
Innum oru mounam enna

Male : Thoongaatha niyaayangalae
Umakkeno indru meelaatha thookkangalae
Dharmangal ellaam ingu oomaiyaagi ponatho

Male : Naanennum agangaaram adhu seiyyum adhigaaram
Eppothum maaratho innalgal theeraatho
Than veedu than pendu than pillai endrennum
Suyalaaba nokkaththil palar vaazhvu yaekkaththil

Male : Nee seiyum theemai
Unnai nizhalaaga serum unmai
Poiyalladaa tamil marai
Sollum idhu saththiyamandro

Male : Thoongaatha niyaayangalae
Umakkeno indru meelaatha thookkangalae
Dharmangal ellaam ingu oomaiyaagi ponatho

Male : Thoongaatha niyaayangalae…..

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தூங்காத நியாயங்களே
உமக்கேனோ இன்று மீளாத தூக்கங்களே
தர்மங்கள் எல்லாம் இங்கு ஊமையாகி போனதோ

ஆண் : தூங்காத நியாயங்களே
உமக்கேனோ இன்று மீளாத தூக்கங்களே…..

ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் என்றெண்ணி நீ உன்னை
சிறையாக்கி கொண்டாயே சிலையாகி நின்றாயே
ஊரெங்கும் உள்ளோர்கள் உறவென்னும் எண்ணங்கள்
நீயேனும் கொண்டாயா ஏனென்று கேட்டாயா

ஆண் : தர்மத்தின் கண்கள் முன்னே
தாய் என்ன பிள்ளை என்ன
நீ கேளடா வரும் பதில்
இன்னும் ஒரு மௌனம் என்ன

ஆண் : தூங்காத நியாயங்களே
உமக்கேனோ இன்று மீளாத தூக்கங்களே
தர்மங்கள் எல்லாம் இங்கு ஊமையாகி போனதோ

ஆண் : நானென்னும் அகங்காரம் அது செய்யும் அதிகாரம்
எப்போதும் மாறாதோ இன்னல்கள் தீராதோ
தன் வீடு தன் பெண்டு தன் பிள்ளை என்றெண்ணும்
சுயலாப நோக்கத்தில் பலர் வாழ்வு ஏக்கத்தில்

ஆண் : நீ செய்யும் தீமை உன்னை
நிழலாக சேரும் உண்மை
பொய்யல்லடா தமிழ் மறை
சொல்லும் இது சத்தியமன்றோ

ஆண் : தூங்காத நியாயங்களே
உமக்கேனோ இன்று மீளாத தூக்கங்களே
தர்மங்கள் எல்லாம் இங்கு ஊமையாகி போனதோ

ஆண் : தூங்காத நியாயங்களே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here