Singers : Haricharan and Amala Chebolu

Music by : M. M. Keeravaani

Lyrics by : Yugabharathi

Female : Aa….aaha….aa….aa….aa….
Aaha…ha…aa….aaha…. haa….aa….
Aa….aaha…..aa….aa….aa….aa….aa….

Male : Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa

Male : Punnagaiyil pooththu sirippaen vaanaa
Chorus : Ninisaa
Male : Kallamillaa ullamirunthaal
Chorus : Ninisaa
Male : Kayilvarum vettrikal thaanaa
Chorus : Ninisaa
Male : Alli alli anbaiyum thanthida
Chorus : Ninisaa
Male : Inbam unnai endrendrum
Ennidumae thozhanaa

Male : Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa

Male : Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa

Male : Yaathum Ingae oorae endraal
Ellai kodae neelaathaiyaa
Chorus : Ellai kodae neelaathaiyaa

Male : Mooththor ellaam deivam endraal
Niththam poojai seivomaiyaa
Chorus : Niththam poojai seivomaiyaa

Male : Anantham namakkullae
Male : Iruppathu kankoodu
Male : Naalellaam vilakkettri
Male : Uravinil kondaadu

Male : Thaengaamal nathi polae odu
Chorus : Ninisaa
Male : Annai aval anbu mugaththil
Chorus : Ninisaa
Male : Aandavanai kandidalaamae
Chorus : Ninisaa
Male : Mella aval sinthidum punnagai
Chorus : Ninisaa
Male : Kai asaikka thunbangal
Thooraththilae odumae

Male and Chorus : Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa

Female : Yaaro peththa pillai endrae
Unnai solla maattomaiyyaa
Chorus : Unnai solla maattomaiyyaa

Male : Engal veettu pillai endrae
Oorae solla kettomaiyyaa
Chorus : Oorae solla kettomaiyyaa

Male : Kai marae karuthaamal
Chorus : Koduppathil vael paari
Male : Thanathendru ennaamala
Chorus : Tharuvaayae nee vaari

Female : Unnai paarththae pozhiyaatho maari
Chorus : Ninisaa
Female : Unnudaiyaa nalla manathai
Chorus : Ninisaa
Female : Solla oru sol kidaiyaathae
Chorus : Ninisaa
Female : Un azhagai minnalum thendralum
Chorus : Ninisaa
Female : Thiththithida niththamum sollidavae yaenguthae

Male and Chorus : Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa

Male and Chorus : Thori pori thom tharana
Sooriyanaa chanthiranaa
Punnagaiyil pooththu sirippaen vaanaa

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் அமலா செபோலு

இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி

பாடலாசிரியர் : யுகபாரதி

பெண் : ஆ…ஆஹ….ஆ….ஆ….ஆ….
ஆஹ….ஹ…ஆ…..ஆஹ ஹா……ஆ…..
ஆ…ஆஹ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….

ஆண் : தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா

ஆண் : புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா
குழு : நிநிசா
ஆண் : கள்ளமில்லா உள்ளமிருந்தால்
குழு : நிநிசா
ஆண் : கையில்வரும் வெற்றிகள் தானா
குழு : நிநிசா
ஆண் : அள்ளி அள்ளி அன்பையும் தந்திட
குழு : நிநிசா
ஆண் : இன்பம் உன்னை என்றென்றும்
எண்ணிடுமே தோழனா

ஆண் : தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா

ஆண் : தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா

ஆண் : யாதும் இங்கே ஊரே என்றால்
எல்லைக் கோடே நீளாதையா
குழு : எல்லைக் கோடே நீளாதையா

ஆண் : மூத்தோர் எல்லாம் தெய்வம் என்றால்
நித்தம் பூஜை செய்வோமையா
குழு : நித்தம் பூஜை செய்வோமையா

ஆண் : ஆனந்தம் நமக்குள்ளே
ஆண் : இருப்பது கண்கூடு
ஆண் : நாளெல்லாம் விளக்கேற்றி
ஆண் : உறவினில் கொண்டாடு

ஆண் : தேங்காமல் நதி போலே ஓடு
குழு : நிநிசா
ஆண் : அன்னை அவள் அன்பு முகத்தில்
குழு : நிநிசா
ஆண் : ஆண்டவனை கண்டிடலாமே
குழு : நிநிசா
ஆண் : மெல்ல அவள் சிந்திடும் புன்னகை
குழு : நிநிசா
ஆண் : கை அசைக்க துன்பங்கள்
தூரத்திலே ஓடுமே

ஆண் மற்றும் குழு : தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா

பெண் : யாரோ பெத்த பிள்ளை என்று
உன்னை சொல்ல மாட்டோமய்யா
குழு : உன்னை சொல்ல மாட்டோமய்யா

ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை என்றே
ஊரே சொல்ல கேட்டோமய்யா
குழு : ஊரே சொல்ல கேட்டோமய்யா

ஆண் : கை மாறே கருதாமல்
குழு : கொடுப்பதில் வேள் பாரி
ஆண் : தனதென்று எண்ணாமல்
குழு : தருவாயே நீ வாரி

பெண் : உன்னைப் பார்த்தே பொழியதோ மாரி
குழு : நிநிசா
பெண் : உன்னுடைய நல்ல மனதை
குழு : நிநிசா
பெண் : சொல்ல ஒரு சொல் கிடையாதே
குழு : நிநிசா
பெண் : உன் அழகை மின்னலும் தென்றலும்
குழு : நிநிசா
பெண் : தித்தித்திட நித்தமும் சொல்லிடவே ஏங்குதே

ஆண் மற்றும் குழு : தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா

ஆண் மற்றும் குழு : தோரி போரி தோம் தரனா
சூரியனா சந்திரனா
புன்னகையில் பூத்து சிரிப்பேன் வானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here