Singer : Sirkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Arithaai perithaai
Vanakkaththirkuriyathaai
Eliyathaai valiyathaai endrumae iniyathaai
Malarnthaai kaninthathaai
Manathilae nirainthathaai
Valarnthathaai vaazhvathaai vantha thaai
Engal thaai…..engal thaai….

Male : Thotta idam thulanga varum
Thaaikulamae varuga
Thotta idam thulanga varum
Thaaikulamae varuga

Male : Kan patta idam poo malarum
Pon magalae varuga
Pon magalae varuga…..nee varuga

Male : Karunai endra deepam
Iru kangalil yeanthiya thaayae
Kaalangalthorum nenjil vanthu
Kovil konda neeyae

Male : Poo mugath thaamarai maelae
Arul pozhigindra dheivaththaayae
Poo mugath thaamarai maelae
Arul pozhigindra dheivaththaayae
Vaanam paarththa bhoomikellam
Maari enbathu neeyae
Muththu maari enbathu neeyae…
Muththu maari enbathu neeyae…

Male : Thotta idam thulanga varum
Thaaikulamae varuga

Male : Idhayam unnai paadum
Nalla ennangal maalaigal podum
Innal vantha naeram unthan
Punnagai aaruthal koorum

Male : Vaavena vendidumpothu
Edhir varugindra selvam neeyae
Naalum konda penmaikkellaam
Thalaiviyaagiya thaayae
Oru thalaiviyaagiya thaayae…..

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : அரியதாய் பெரியதாய்
வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய்
மனதிலே நிறைந்ததாய்
வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
எங்கள் தாய்……எங்கள் தாய்……

ஆண் : தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக

ஆண் : கண் பட்ட இடம் பூ மலரும்
பொன் மகளே வருக
பொன் மகளே வருக…..நீ வருக

ஆண் : கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து
கோவில் கொண்ட நீயே

ஆண் : பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே….

ஆண் : தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக

ஆண் : இதயம் உன்னைப்பாடும்
நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன்
புன்னகை ஆறுதல் கூறும்

ஆண் : வாவென வேண்டிடும்போது
எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்

தலைவியாகிய தாயே
ஒரு தலைவியாகிய தாயே……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here