Singer : Harish Sivaramakrishnan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Karthik Netha

Male : Thuli eeram surakadha vaazhvil
Aram thoonghi vazhigindra ooril
Oru needhi thalaiyeeri aadum
Aneedhi

Male : Madhayanai arasaalum kaatil
Thanakkaana idam thedum eesal
Kidaikkamal alai modhum sogam
Aneedhi

Male : Yaar needhi melo yaar needhi keezho
Panam kaasin kaiyongum podhu
Pasi yaavum vazh yendhum podhu
Muran pattin malaraaga pookkum
Aneedhi aneedhi

Male : Kaanal neeroo siru ootrro
Needhi dhaan yaadhoo
Poovin kaambhae seezh endraal
Vaasam thaan kanavoo

Male : Vinmeenoo kanneeroo
Needhithaan edhuvoo
Maanudam enbathae
Maaperum tholviyoo
Eliyavar vaazhum vaazhvoo aneedhi

Male : Meengalin thevaiyoo
Thoondalin aasaiyoo
Uyir vaazhdhalin koothilae
Yaavumae kelviyoo

Male : Kaanal neeroo siru ootrro
Needhi dhaan yaadhoo

பாடகர் : ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : துளி ஈரம் சுரக்காத வாழ்வில்
அரும் தூங்கி வழிகின்ற ஊரில்
ஒரு நீதி தலையேறி ஆடும்
அநீதி

ஆண் : மதயானை அரசாளும் காட்டில்
தனக்கான இடம் தேடும் ஈசல்
கிடைக்காமல் அலை மோதும் சோகம்
அநீதி

ஆண் : யார் நீதி மேலோ யார் நீதி கீழோ
பணம் காசின் கையோங்கும் போது
பசி யாவும் வாழேந்தும் போது
முரண்பாட்டின் மலராக பூக்கும்
அநீதி அநீதி

ஆண் : கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ
பூவின் காம்பே சீழ் என்றால்
வாசம் தான் கனவோ

ஆண் : விண்மீனோ கண்ணீரோ
மீதிதான் எதுவோ
மானுடம் என்பதே
மாபெரும் தோல்வியோ
எளியவர் வாழும் வாழ்வோ அநீதி

ஆண் : மீன்களின் தேவையோ
தூண்டிலின் ஆசையோ
உயிர் வாழ்தலின் கூத்திலே
யாவுமே கேள்வியோ

ஆண் : கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here