Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : O oo hoo oo oo hoo oo
O oo hoo oo oo hoo oo
hoo oo oo hoo oo ooo

Female : Thuliyo thuli…
Thuliyo thuli muthu thuli
Kiliyo kili thanga kili
Paniyo pani velli pani
Kaniyo kani vanna kani
Ellaam oru pennaanadhu
Pennaagiyae pan paadudhu

Female : Neer megam oor sutrum yerkaattilae
Naanalgal poothaadum thaen paattilae
Neer megam oor sutrum yerkaattilae
Naanalgal poothaadum thaen paattilae

Female : Thuliyo thuli muthu thuli
Kiliyo kili thanga kili

Female : Salasalathu sendridum
Nadhi azhagu
Nelindhu varum sitridai
Nadai azhagu
Kalakalathu pongidum
Alai azhagu
Kulungi varum kai valai
Isai azhagu

Female : Kothidum alagugalaal
Konjidum paravaigalum
Nithamum arumbu vittu
Nindridum poo maramum

Female : Ennidam pala kadhaigal
Sollidum uyir thozhi
Sonnadhum ila manadhil
Vandhidum sugam kodi
Poon koottam paaraattum
Poongaatru thaan

Female : Thuliyo thuli muthu thuli
Kiliyo kili thanga kili
Ellaam oru pennaanadhu
Pennaagiyae pan paadudhu

Female : Neer megam oor sutrum yerkaattilae
Naanalgal poothaadum thaen paattilae

Female : Iyarkai annai konjidum
Ilaiya magal
Enadhu manam vennira
Vasantha mullai
Iravu pagal sindhugal
Isaitha padi
Ulavugindren sanjalam
Edhuvum illai

Female : En dhisai muzhuvadhilum
En kural bavani varum
Mellisai inimaiyilae
Mayangidum manidha kulam

Female : Mangaiyin vazhi maraikka
Ingoru thadai yedhu
Nil yena enai thaduthu
Solbavar kidaiyaadhu
Kaavalgal illaadha kaattaaru thaan

Female : Thuliyo thuli muthu thuli
Kiliyo kili thanga kili
Ellaam oru pennaanadhu
Pennaagiyae pan paadudhu

Female : Neer megam oor sutrum yerkaattilae
Naanalgal poothaadum thaen paattilae
Neer megam oor sutrum yerkaattilae
Naanalgal poothaadum thaen paattilae

Female : Thuliyo thuli muthu thuli
Kiliyo kili thanga kili
Paniyo pani velli pani
Kaniyo kani vanna kani

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓஒ….ஓஒ……ஓஓஒ…..
ஓஒ….ஓஒ……ஓஓஒ…..
ஓஒ….ஓஒ……ஓஓஒ…..

பெண் : துளியோ துளி……ஈ….

பெண் : துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி
பனியோ பனி வெள்ளிப்பனி
கனியோ கனி வண்ணக்கனி

பெண் : எல்லாம் ஒரு பெண்ணானது
பெண்ணாகியே பண்பாடுது
நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

பெண் : நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

பெண் : துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி

பெண் : சலசலத்து சென்றிடும்
நதி அழகு
நெளிந்து வரும் சிற்றிடை
நடை அழகு
கலகலத்து பொங்கிடும்
அலை அழகு
குலுங்கி வரும் கைவளை
இசை அழகு

பெண் : கொத்திடும் அலகுகளால்
கொஞ்சிடும் பறவைகளும்
நித்தமும் அரும்பு விட்டு
நின்றிடும் பூ மரம்

பெண் : எண்ணிட பல கதைகள்
சொல்லிடும் உயிர் தோழி
சொன்னதும் இள மனதில்
வந்திடும் சுகம் கோடி
பூங்கூட்டம் பாராட்டும்
பூங்காற்று நான்

பெண் : துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி

பெண் : எல்லாம் ஒரு பெண்ணானது
பெண்ணாகியே பண்பாடுது
நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

பெண் : இயற்கை அன்னை
கொஞ்சிடும் இளைய மகள்
எனது மனம் வெண்ணிற
வசந்த முல்லை

பெண் : இரவு பகல் சிந்துகள்
இசைத்த படி
உலவுகின்றேன் சஞ்சலம்
எதுவும் இல்லை

பெண் : எண் திசை முழுவதிலும்
என் குரல் பவனி வரும்
மெல்லிசை இனிமையிலே
மயங்கிடும் மனித குலம்

பெண் : மங்கையின் வழி மறைக்க
இங்கொரு தடை ஏது
நில் என எனை தடுத்து
சொல்பவர் கிடையாது
காவல்கள் இல்லாத
காட்டாறு நான்

பெண் : துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி

பெண் : எல்லாம் ஒரு பெண்ணானது
பெண்ணாகியே பண்பாடுது
நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

பெண் : நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

பெண் : துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி
பனியோ பனி வெள்ளிப்பனி
கனியோ கனி வண்ணக்கனி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here