Singer : K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Uchchi malai megangal thooralgal poda
Suttri varum poongaattru themmaanga paada
Kaavinil poovinil thaeneekkal
Kavithaigal paadidum neram
Female : Kaaviyam aayiram naal thorum
Senthamizh saalaiyin oram
Ammammaa sugam ammammaa
Female : Uchchi malai megangal thooralgal poda
Uchchi malai megam
Female : Thaththi thathth paainthodum thanga nathi aada
Chinna chinna naanalgal mella jadhi poda
Vella pani moottangal vanthu vanthu ooda
Pettreduththa penn pola kaiyai thottukkooda
Intha magalai alli anaikkum
Anbu thanthaiyo enna vinnthaiyo
Female : Eththanai eththanai kolangal
Iththarai meedhinil naalum
Thaththana thiththana thaanaa thana thiththana thaththana thaanaa
Ammammaa sugam ammammaa
Female : Uchchi malai megangal thooralgal poda
Uchchi malai megam
Female : Vanna mugil illaatha vaanam adhai paarththaen
Vennilavin aadaigal engae endru kaettaen
Chiththiraiyil thuvaitheduththu kaaya vaiththa aadai
Maargazhiyil anivaalo vaanam enum thogai
Intha vanappu kandu rasikkum
Vanji manamthaan thulli kudhiikkum
Female : Eththanai eththanai kolangal
Iththarai meedhinil naalum
Thaththana thiththana thaanaa thana thiththana thaththana thaanaa
Ammammaa sugam ammammaa
Female : Uchchi malai megangal thooralgal poda
Suttri varum poongaattru themmaanga paada
Kaavinil poovinil thaeneekkal
Kavithaigal paadidum neram
Female : Kaaviyam aayiram naal thorum
Senthamizh saalaiyin oram
Ammammaa sugam ammammaa
Female : Uchchi malai megangal thooralgal poda
Uchchi malai megam
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பெண் : உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
சுற்றி வரும் பூங்காற்று தெம்மாங்கு பாட
காவினில் பூவினில் தேனீக்கள்
கவிதைகள் பாடிடும் நேரம்
பெண் : காவியம் ஆயிரம் நாள் தோறும்
செந்தமிழ்ச் சாலையின் ஓரம்
அம்மம்மா சுகம் அம்மம்மா
பெண் : உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
உச்சி மலை மேகம்….
பெண் : தத்தித் தத்திப் பாய்ந்தோடும் தங்க நதி ஆட
சின்னச் சின்ன நாணல்கள் மெல்ல ஜதி போட
வெள்ளிப் பனி மூட்டங்கள் வந்து வந்து ஓட
பெற்றெடுத்த பெண் போல கையை தொட்டுக் கூட
இந்த மகளை அள்ளி அணைக்கும்
அன்புத் தந்தையோ என்ன விந்தையோ
பெண் : எத்தனை எத்தனை கோலங்கள்
இத்தரை மீதினில் நாளும்
தத்தன தித்தன தானா தன தித்தன தத்தன தானா
அம்மம்மா சுகம் அம்மம்மா……..
பெண் : உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
உச்சி மலை மேகம்….
பெண் : வண்ண முகில் இல்லாத வானம் அதை பார்த்தேன்
வெண்ணிலவின் ஆடைகள் எங்கே என்று கேட்டேன்
சித்திரையில் துவைத்தெடுத்து காய வைத்த ஆடை
மார்கழியில் அணிவாளோ வானம் எனும் தோகை
இந்த வனப்பு கண்டு ரசிக்கும்
வஞ்சி மனம் தான் துள்ளி குதிக்கும்
பெண் : எத்தனை எத்தனை கோலங்கள்
இத்தரை மீதினில் நாளும்
தத்தன தித்தன தானா தன தித்தன தத்தன தானா
அம்மம்மா சுகம் அம்மம்மா….
பெண் : உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
சுற்றி வரும் பூங்காற்று தெம்மாங்கு பாட
காவினில் பூவினில் தேனீக்கள்
கவிதைகள் பாடிடும் நேரம்
பெண் : காவியம் ஆயிரம் நாள் தோறும்
செந்தமிழ்ச் சாலையின் ஓரம்
அம்மம்மா சுகம் அம்மம்மா
பெண் : உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட
உச்சி மலை மேகம்….