Singer : Harini

Music by : S Thaman

Lyrics by : Vivek

Female : Ulagai vella pogiraal
Aval oruthi
Urudhi ena aagiraal
Pala padigal thondrinaal
Bayam niruthi
Oru padiyil yerinaal

Female : Thadaigalo thondrum yeraalam
Vidaigalai thaan paarthaal
Aduppile pogum pen vaazhvai
Uyarthida vazhi paarthaal

Female : Aalam aanaal aazham aanaal
Amudhame seiyyum thaayaanaal

Female and Chorus : Kalaimagal karuvinil valarndhaalaa
Kanavugal thunayena poothaalaa
Siripudan neruppinil nadandhaalaa
Siragena thiramaigal serthaalaa

Female : Thandhayin tholgalaye
Oonjalaai unarndhaalaa
Aasayaai avar azhaikka
Thogayaai asaindhaalaa
Asayum aval aasayai thadukka
Asaiva suvar thevayaa
Oru puyalin paadhayai marikka
Sarugugalin veliyaa

Female : Vannam aannaal annam aanaal
Pudhu vazhiyin pooranamaai

Female and Chorus : Kalaimagal karuvinil valarndhaalaa
Kanavugal thunayena poothaalaa
Siripudan neruppinil nadandhaalaa
Siragena thiramaigal serthaalaa

பாடகி : ஹரிணி

இசை அமைப்பாளர் : எஸ் தமன்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : உலகை வெல்ல போகிறாள்
அவள் ஒருத்தி
உறுதி என ஆகிறாள்
பல படிகள் தோன்றினால்
பயம் நிறுத்தி
ஒரு படியில் எறினாள்

பெண் : தடைகளே தோன்றும் ஏராளம்
விடைகளை தான் பார்த்தாள்
அடுப்பிலே போகும் பெண் வாழ்வை
உயர்திட வழி பார்த்தாள்

பெண் : ஆலம் ஆனால் ஆழம் ஆனால்
அமுதமே செய்யும் தாயானாள்

பெண் மற்றும் குழு : கலைமகள் கருவினில் வளர்ந்தாளா
கனவுகள் துணையென பூத்தாளா
சிரிப்புடன் நெருப்பில் நடந்தாளா
சிறகென திறமைகள் சேர்த்தாளா

பெண் : தந்தையின் தோள்களை
ஊஞ்சலாய் உணர்ந்தாளா
ஆசையாய அவர் அழைக்க
தோகையாய் அசைந்தாளா
அசையும் அவள் ஆசையைத் தடுக்க
அசைவ சுவர் தேவையா
ஒரு புயலின் பாதையை மறிக்க
சருகுகளின் வேலியா

பெண் : வண்ணம் ஆனாள் அன்னம் ஆனாள்
புது வழியின் பூரணமாய்

பெண் மற்றும் குழு : கலைமகள் கருவினில் வளர்ந்தாளா
கனவுகள் துணையென பூத்தாளா
சிரிப்புடன் நெருப்பில் நடந்தாளா
சிறகென திறமைகள் சேர்த்தாளா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here