Singers : Thiruchi Loganathan and A. V. Saraswathi

Music by : K. V. Mahadevan

Male : Aanaanap pattathellaam
Thaanaanae podaiyilae….
Ae…ae….ae…ae….ae….ae…ae….

Female : Ingae altaappu jodi vanthu
Aattam poduthu paraa paramae…
Aa…aa…aa…aa….aa….aa….
Male : Appadi

Both : Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Oorai yaeichchu odambai valakkuthu
Aei aiyyaa aei ammaa

Male : Ullukkullae nadakkuthu
Female : Solla ponaa moraikkuthu
Male : Ullukkullae nadakkuthu
Female : Solla ponaa moraikkuthu

Both : Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu

Female : Unda veettukku rendagam senjavan
Uruppuduvaanaa machchaan uruppuduvaanaa
Unda veettukku rendagam senjavan
Uruppuduvaanaa machchaan uruppuduvaanaa

Male : Avan odhai vaangaamae oorai vittu
Purappaduvaanaa avan purappaduvaanaa
Avan odhai vaangaamae oorai vittu
Purappaduvaanaa avan purappaduvaanaa

Female : Kanda pengalai kannai adichchavan
Kaalanthalluvaanaa
Kanda pengalai kannai adichchavan
Kaalanthalluvaanaa

Male : Antha kaaladippaya vaalaattaththaiyum
Kavanikkaama edang koduththuttu

Both : Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu

Male : Dangaach chaappu dangaach chaappu joru
Angae daaladikuthu paaru
Un chaappu dangaach chaappu joru
Angae daaladikuthu paaru

Female : Namma thanthaanaththaan paattai kettu
Thayangi nirppavan yaaru
Namma thanthaanaththaan paattai kettu
Thayangi nirppavan yaaru entha ooru
Entha ooraam
Male : Veliyooru
Avanukku samayam paaththu thaalam pottu
Padhukkuraanae jameenthaaru

Both : Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu
Ulagam appdi irukkuthu
Kalagam ippadi nadakkuhu

Male : Thalukku kaattiyae kanakku pannuthaam
Jameenthaarin ponnu oru jameenthaarin ponnu
Thalukku kaattiyae kanakku pannuthaam
Jameenthaarin ponnu oru jameenthaarin ponnu

Female : Antha minukkai paarththathum mayangi yaenguthaam
Manager-in kannu oru manager-in kannu
Antha minukkai paarththathum mayangi yaenguthaam
Manager-in kannu oru manager-in kannu

Male : Kanakku pannittaan…
Female : Kaasai parichchuttaa
Male : Kaiyaalaagathavan kaiyai piduchchuttaan

Male : Kanakku pannittaan…
Female : Kaasai parichchuttaa
Male : Kaiyaalaagathavan kaiyai piduchchuttaan
Female : Oorai keduththuttaan
Male : Perai keduththuttaa
Female : Udhadu kannaththai
Male : Uppa vachchuttaan

Female : Ooru sirikkuthu
Male : Kaari thupputhu
Female : Vekkang kettathu
Male : Veri pidichchuthu
Female : Maanag kettathu
Male : Madhamung kondathu
Female : Manushanaa….maadaa…
Male : Mariyaathaiyillae

Both : Adiyo udhaiyo…
Kuththo kolaiyo….

பாடகர்கள் : திருச்சி லோகநாதான் மற்றும் ஏ. வி. சரஸ்வதி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஆனானப் பட்டதெல்லாம்
தானானே போடையிலே…
ஏ….ஏ….ஏ…..ஏ….ஏ…ஏ….ஏ….

பெண் : இங்கே அல்டாப்பு ஜோடி வந்து
ஆட்டம் போடுது பரா பரமே….
ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…
ஆண் : அப்படி

இருவர் : உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
ஊரை ஏய்ச்சு ஒடம்பை வளக்குது
ஏய் ஐயா ஏய் அம்மா

ஆண் : உள்ளுக்குள்ளே நடக்குது
பெண் : சொல்லப் போனா மொறைக்குது
ஆண் : உள்ளுக்குள்ளே நடக்குது
பெண் : சொல்லப் போனா மொறைக்குது

இருவர் : உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது

பெண் : உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன்
உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன்
உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா

ஆண் : அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப்
புறப்படுவானா அவன் புறப்படுவானா
அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப்
புறப்படுவானா அவன் புறப்படுவானா

பெண் : கண்ட பெண்களை கண்ணையடிச்சவன்
காலந்தள்ளுவானா
கண்ட பெண்களை கண்ணையடிச்சவன்
காலந்தள்ளுவானா

ஆண் : அந்தக் காலடிப்பய வாலாட்டத்தையும்
கவனிக்காம எடங் கொடுத்துட்டு

இருவர் : உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது

ஆண் : டங்காச் சாப்பு டங்காச் சாப்பு ஜோரு
அங்கே டாலடிக்குது பாரு
உன் டங்காச் சாப்பு ஜோரு
அங்கே டாலடிக்குது பாரு

பெண் : நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு
தயங்கி நிற்பவன் யாரு
நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு
தயங்கி நிற்பவன் யாரு எந்த ஊரு
எந்த ஊராம்
ஆண் : வெளியூரூ
அவனுக்கு சமயம் பாத்து தாளம் போட்டு
பதுங்குறானே ஜமீன்தாரு………

இருவர் : உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது

ஆண் : தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம்
ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு
தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம்
ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு

பெண் : அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம்
மேனேஜரின் கண்ணு ஒரு மேனேஜரின் கண்ணு
அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம்
மேனேஜரின் கண்ணு ஒரு மானேஜரின் கண்ணு

ஆண் : கணக்கு பண்ணிட்டான்……
பெண் : காசைப் பறிச்சுட்டா
ஆண் : கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்

ஆண் : கணக்கு பண்ணிட்டான்……
பெண் : காசைப் பறிச்சுட்டா
ஆண் : கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்
பெண் : ஊரைக் கெடுத்துட்டான்…..
ஆண் : பேரைக் கெடுத்துட்டா
பெண் : உதடு கன்னத்தை…….
ஆண் : உப்ப வச்சுட்டான்

பெண் : ஊரு சிரிக்குது……
ஆண் : காறித் துப்புது
பெண் : வெக்கங் கெட்டது…..
ஆண் : வெறிப் பிடிச்சது
பெண் : மானங் கெட்டது….
ஆண் : மதமுங் கொண்டது
பெண் : மனுசனா…..மாடா….
ஆண் : மரியாதையில்லே

இருவர் : அடியோ உதையோ……
குத்தோ கொலையோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here