Singers : A. L. Raghavan, Soolamnagalam Rajalakshmi and P. Susheela

Music by : K. V. Mahadevan

Chorus : Endrum pudhidhaaga ilamai kuraiyaamal
Thendral pol kaaviri pol thennanthamizhae pol
Anbu manaiyaalum aanai thalai maganum
Nindru nilaithu needoozhi vaazhiyavae
Needoozhi vaazhiyavae

Chorus : Ulagathilae oruvanena
Uyarndhu nirkkum thilagamae
Udanirundhu kaalamellaam
Manam parappum idhayamae
Ulagathilae oruvanena
Uyarndhu nirkkum thilagamae
Udanirundhu kaalamellaam
Manam parappum idhayamae

Chorus : Valluvanum vaasukiyum
Vaazhndhu vandhadhum annaalae
Valluvanum vaasukiyum
Vaazhndhu vandhadhum annaalae
Maru pirappil avar pol vandhu
Aram valarppadhum innaalae

Chorus : Jaanakikkum raamanukkum
Saridham kandadhu innaalae
Andha sarithirathil ungalukkum
Kidaikkum oru ponnaedu
Andha sarithirathil ungalukkum
Kidaikkum oru ponnaedu
Kidaikkum oru ponnaedu
Kidaikkum oru ponnaedu

Female : Iraivan ennai padaithaan
Vaazhvum kodutthaan
Enakkoru ulagam kaattinaan
Iraivan ennai padaithaan
Vaazhvum kodutthaan
Enakkoru ulagam kaattinaan

Female : Ennai pola vaazhndhavargal kuraivu
En dhaevan thandhadhindha niraivu
Ennai pola vaazhndhavargal kuraivu
En dhaevan thandhadhindha niraivu
Andha dheivathukkum indha dhaevanukkum
Endhan kannum nenjum endrum adimai

Female : Iraivan ennai padaithaan
Vaazhvum kodutthaan
Enakkoru ulagam kaattinaan
Iraivan ennai padaithaan
Vaazhvum kodutthaan

Male : Dialogue ………………..

Chorus : Varusham ponaal enna
Nalla vayasum aanaal enna
Uruvathai paaradi mella
Mugam irubadhai thaandiyadhalla
Varusham ponaal enna
Nalla vayasum aanaal enna
Uruvathai paaradi mella
Mugam irubadhai thaandiyadhalla

Male : Ammaadi idhu enna udambu
Andha naal aandavan padaippu
Ammaadi idhu enna udambu
Andha naal aandavan padaippu

Female : Vidavillai vaaliba thudippu

Male : Vilaiyaada aayiram ninaippu

Chorus : Vidavillai vaaliba thudippu
Vilaiyaada aayiram ninaippu

Female : Thavikkudhu thanimai thaedi

Male : Andha thanimaikku idhu nalla jodi

Chorus : Thavikkudhu thanimai thaedi
Andha thanimaikku idhu nalla jodi

Chorus : Varusham ponaal enna
Nalla vayasum aanaal enna
Uruvathai paaradi mella
Mugam irubadhai thaandiyadhalla
Mugam irubadhai thaandiyadhalla
Mugam irubadhai thaandiyadhalla

Chorus : Kannoonjal aadinaal kaanjana maalai
Kaanjana maalai ponnoonjal aadinaal
Porpadhavalli porpadhavalli
Laali suba laali laali suba laali

பாடகர்கள் : ஏ. எல். ராகவன், சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

குழு : என்றும் புதிதாக இளமை குறையாமல்
தென்றல் போல் காவிரி போல் தென்னந்தமிழே போல்
அன்பு மனையாளும் ஆணை தலை மகனும்
நின்று நிலைத்து நீடூழி வாழியவே
நீடூழி வாழியவே

குழு : உலகத்திலே ஒருவனென
உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம்
மணம் பரப்பும் இதயமே
உலகத்திலே ஒருவனென
உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம்
மணம் பரப்பும் இதயமே

குழு : வள்ளுவனும் வாசுகியும்
வாழ்ந்து வந்ததும் அந்நாளே
வள்ளுவனும் வாசுகியும்
வாழ்ந்து வந்ததும் அந்நாளே
மறு பிறப்பில் அவர் போல் வந்து
அறம் வளர்ப்பதும் இந்நாளே

குழு : ஜானகிக்கும் ராமனுக்கும்
சரிதம் கண்டது இந்நாளே
அந்த சரித்திரத்தில் உங்களுக்கும்
கிடைக்கும் ஒரு பொன்னேடு
ஜானகிக்கும் ராமனுக்கும்
சரிதம் கண்டது இந்நாளே
அந்த சரித்திரத்தில் உங்களுக்கும்
கிடைக்கும் ஒரு பொன்னேடு
கிடைக்கும் ஒரு பொன்னேடு
கிடைக்கும் ஒரு பொன்னேடு

பெண் : இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்
இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்

பெண் : என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு
என் தேவன் தந்ததிந்த நிறைவு
என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு
என் தேவன் தந்ததிந்த நிறைவு
அந்த தெய்வத்துக்கும் இந்த தேவனுக்கும்
எந்தன் கண்ணும் நெஞ்சும் என்றும் அடிமை

பெண் : இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்
இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்

ஆண் : வசனம் …………………………..

குழு : வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருபதை தாண்டியதல்ல

ஆண் : அம்மாடி இது என்ன உடம்பு
அந்த நாள் ஆண்டவன் படைப்பு
அம்மாடி இது என்ன உடம்பு
அந்த நாள் ஆண்டவன் படைப்பு

பெண் : விடவில்லை வாலிப துடிப்பு

ஆண் : விளையாட ஆயிரம் நினைப்பு

குழு : விடவில்லை வாலிப துடிப்பு
விளையாட ஆயிரம் நினைப்பு

பெண் : தவிக்குது தனிமை தேடி

ஆண் : அந்த தனிமைக்கு இது நல்ல ஜோடி

குழு : தவிக்குது தனிமை தேடி
அந்த தனிமைக்கு இது நல்ல ஜோடி

குழு : வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல

குழு : கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சன மாலை
காஞ்சன மாலை பொன்னூஞ்சல் ஆடினாள்
பொற்பதவள்ளி பொற்பதவள்ளி
லாலி சுப லாலி லாலி சுப லாலி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here