Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Neeraadi pattuduththi nindravargal yaavarkkum
Seeraana vaazhvu tharum selva thiru kumara
Maaratha selvamudan vaazha thunai purivaai
Sooranaiyae vendra thooyavanae senthooraa…

Female : Ullam urugaatha
Enthan oonum urugaathaa
Ullam urugaatha
Enthan oonum urugaathaa
Annai azhaiththaal arugil varuvaai
Peranbu gurunaatha muruga

Female : Ullam urugaatha
Enthan oonum urugaathaa

Female : Thangaratham pol mayil vaaganaththil
Kanthan vanthaal kavalaigal theerum
Thangaratham pol mayil vaaganaththil
Kanthan vanthaal kavalaigal theerum

Female : Angam muzhuthum thiruneeru aniyum
Annai mugaththil anantham malarum
Angam muzhuthum thiruneeru aniyum
Annai mugaththil anantham malarum

Female : Kanthaa…azhagu thirukumaraa
Senthil amutha vadivazhagaa
Kanthaa…azhagu thirukumaraa
Senthil amutha vadivazhagaa

Female : Nallavar ellaam kettathai kodukkum
Allal theerkkum kanthanin vedham
Entha noyum anuga vidaathae
Endrum kaakkum vaiththiyanaathan

Female : Vela karunai mazhai mugilae
Bala pazhani malai arasae

Female : Ullam urugaatha
Enthan oonum urugaathaa
Annai azhaiththaal arugil varuvaai
Peranbu gurunaatha muruga

Female : Ullam urugaatha
Enthan oonum urugaathaa….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும்
சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா
மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய்
சூரனையே வென்ற தூயவனே செந்தூரா……

பெண் : உள்ளம் உருகாதா
எந்தன் ஊனும் உருகாதா
உள்ளம் உருகாதா
எந்தன் ஊனும் உருகாதா
அன்னை அழைத்தால் அருகில் வருவாய்
பேரன்பு குருநாதா முருகா……

பெண் : உள்ளம் உருகாதா
எந்தன் ஊனும் உருகாதா

பெண் : தங்கரதம் போல் மயில் வாகனத்தில்
கந்தன் வந்தால் கவலைகள் தீரும்
தங்கரதம் போல் மயில் வாகனத்தில்
கந்தன் வந்தால் கவலைகள் தீரும்

பெண் : அங்கம் முழுதும் திருநீறு அணியும்
அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும்
அங்கம் முழுதும் திருநீறு அணியும்
அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும்

பெண் : கந்தா…. அழகுத் திருக்குமரா
செந்தில்…. அமுத வடிவழகா……
கந்தா…. அழகுத் திருக்குமரா
செந்தில்…. அமுத வடிவழகா……

பெண் : நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும்
அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம்
எந்த நோயும் அணுக விடாதே
என்றும் காக்கும் வைத்திய நாதன்

பெண் : வேலா…. கருணை மழை முகிலே
பாலா…. பழநி மலை அரசே……

பெண் : உள்ளம் உருகாதா
எந்தன் ஊனும் உருகாதா
அன்னை அழைத்தால் அருகில் வருவாய்
பேரன்பு குருநாதா முருகா……

பெண் : உள்ளம் உருகாதா
எந்தன் ஊனும் உருகாதா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here