Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Male : Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae
Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae
Adhai en vizhiyil thenpadamal
Maraiththu vaiththaai neeyae

Male : Sangaranum paadi vaiththaan sowntharyalahari…ee….
Sangaranum paadi vaiththaan sowntharyalahari…
Antha sowntharya devathaikku kanyaakumari

Male : Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae

Male : Aadhi mudhal antham varai arinthavanillai
Un antharangam ennavendru purinthavanillai
Aadhi mudhal antham varai arinthavanillai
Un antharangam ennavendru purinthavanillai

Male : Azhagu ennum saagaraththil
Kadaintheduththa amutham
Adhil oru thulithaan ulagariyum
Oliththu vaiththaai muzhuthum

Male : Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae

Male : Vaarkuzhalin karumai niram
Kaarmugil kaatta….aa
Vaarkuzhalin karumai niram
Kaarmugil kaatta….
Un vaai idhazhin ilanjivappai
Vaan kadhirthaan theetta

Male : Vaarkuzhalin karumai niram
Kaarmugil kaatta….
Un vaai idhazhin ilanjivappai
Vaan kadhirthaan theetta

Male : Vizhi malarin venmai niram
Kulir nilavil vilanga…aa…aa…aa…
Vizhi malarin venmai niram
Kulir nilavil vilanga…
Un kural padaiththa menmaiyellaam
Poovinaththil kulunga…

Male : Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே
உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே
அதை என் விழியில் தென்படாமல்
மறைத்து வைத்தாய் நீயே

ஆண் : சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி….ஈ…..
சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி…..
அந்த சௌந்தர்ய தேவதைக்கு கன்யாகுமரி……

ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே

ஆண் : ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை
உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை
ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை
உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை

ஆண் : அழகு என்னும் சாகரத்தில்
கடைந்தெடுத்த அமுதம்
அதில் ஒரு துளிதான் உலகறியும்
ஒளித்து வைத்தாய் முழுதும்….

ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே

ஆண் : வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட….ஆ…..
வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட….
உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை
வான் கதிர்தான் தீட்ட

ஆண் : வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட…
உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை
வான் கதிர்தான் தீட்ட

ஆண் : விழி மலரின் வெண்மை நிறம்
குளிர் நிலவில் விளங்க….ஆ….ஆ….ஆ….
விழி மலரின் வெண்மை நிறம்
குளிர் நிலவில் விளங்க….
உன் குரல் படைத்த மென்மையெல்லாம்
பூவினத்தில் குலுங்க…….

ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here