Singers : Aravind Karneeswaran and Amina Rafiq

Music by : Santhosh Balaji

Lyrics by : Ziya Hadhijath

Female : Un kaadhalaal udainthathe karvam
Mounathil mayangum penmani naanum
Un vaarthaiyil sidharuthu sitham
Kanmaniyena nee azhaithida naanum

Female : Manam ariya pudhu vidha yekkam
Endhan uyir varai un kadhalai thakkum
Kangal adhu unai mattum paarkum
Enadhu penmai un aruginil thorkkum

Male : Ohhhooo
Male : Kanmani kanmani aasai aasaiyaai koodudhae
En manadhil unai mattum ketkudhae yerkudhae
Endrum unakkullae tholaindhida thonudhadi

Female : Un kaadhalaal udainthathe karvam
Mounathil mayangum penmani naanum

Male : Theeyna therindhum arugil vara thunindhenadi
Valiyena arindhum sugathai idhil unardhenadi

Female : Neerai neruppin adiyil sumandhenada
Unakkul ezhumoo oru theechudaraa

Male : Mei marandhu theeyil medhuvaai erindhen
Vizhundha idamae theeyilla
Neeyendru pinbae purindhen

Female : Ohooo
Kalvenae kalvenae
Kaayam thandhaval endrumae naanada
Eninum ennaithaan
Oru murai paarthu sellada
Uyir pizhaippen un madiyil

Female : En kaadhalaal udainthavan neeyoo
Indha mouunam nammai kolvadhu yenoo
En aasaiyin vilaivariyamal
Unnnai naan adhil izhuthu vittenoo

பாடகர்கள் : அரவிந்த் கார்ணீஸ்வரன் மற்றும் ஆமினா ரபிக்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் பாலாஜி

பாடல் ஆசிரியர் : ஜியா ஹதீஜாத்

பெண் : உன் காதலால் உடைந்தது கர்வம்
மெளனத்தில் மயங்கும் பெண்மணி நானும்
உன் வார்த்தையில் சிதறுது சித்தம்
கண்மணியென நீ அழைத்திட நானும்

பெண் : மனம் அறியா புது வித ஏக்கம்
எந்தன் உயிர் வரை உன் காதலை தாக்கும்
கண்கள் அது உனை மட்டும் பார்க்கும்
எனது பெண்மை உன் அருகினில் தோற்கும்

ஆண் : ஹோ ஓ
கண்மணி கண்மணி ஆசை ஆசையாய் கூடுதே
என் மனதில் உனை மட்டும் கேட்குதே ஏற்குதே
என்றும் உனக்குள்ளே தொலைந்திட… தோனுதடி

பெண் : உன் காதலால் உடைந்தது கர்வம்
மெளனத்தில் மயங்கும் பெண்மணி நானும்

ஆண் : தீயென தெரிந்தும் அருகில் வர துணிந்தேனடி
வலியென அறிந்தும் சுகத்தை இதில் உணர்ந்தேனடி

பெண் : நீரை நெருப்பின் அடியில் சுமந்தேனடா
உனக்குள் எழுமோ ஒரு தீச்சுடரா

ஆண் : மெய் மறந்து தீயில் மெதுவாய் எறிந்தேன்
விழுந்த இடமே தீயல்ல
நீயென்று பின்பே புரிந்தேன்

பெண் : ஓஹோ
கள்வனே கள்வனே
காயம் தந்தவள் என்றுமே நானடா
எனினும் என்னைத்தான்
ஒரு முறை பார்த்து சொல்லடா
உயிர்பிழைப்பேன் உன் மடியில்

பெண் : என் காதலால் உடைந்தது நீயோ
இந்த மெளனம் நம்மை கொல்வது ஏனோ
என் ஆசையின் விளைவறியாமல்
உன் மீது உள்ளுள் நான் இழுத்துவிட்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here