Singer : T. R. Mahalingam

Music by : C. N. Pandurangan

Lyrics by : Kannadasan

Male : Un sivaleelai en veettilaa
Sivaleelai en veettilaa
Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa

Male : Sivaleelai en veettilaa
Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa

Male : Sivaleelai en veettilaa

Male : Sevagan kulam paarththu naayagan vilaiyaada
Sevagan kulam paarththu naayagan vilaiyaada
Kaaranam ariyaenaiyaa
Kaaranam ariyaenaiyaa….

Male : Sivaleelai en veettilaa
Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa

Male : Thaayattra pillaikku thaayaanavan
Thondan thazhuvi magizha oru saeyaanavan
Thaayattra pillaikku thaayaanavan
Thondan thazhuvi magizha oru saeyaanavan

Male : Kalaiyaanavan engum nilaiyaanavan
Kalaiyaanavan engum nilaiyaanavan
En kanneerai ariyaatha silaiyaanavan
En kanneerai ariyaatha silaiyaanavan

Male : Sivaleelai en veettilaa
Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa

Male : Sivaleelai en veettilaa…

Male : Marainthathu thiruvodu un maayamo
Unnai manathil ninaiththarkku idhu laabamo
Marainthathu thiruvodu un maayamo
Unnai manathil ninaiththarkku idhu laabamo

Male : Vidhi vegamo seitha vinai vegamo
Intha sabhaiyaeri saatchi solla varalaagumo
Intha sabhaiyaeri saatchi solla varalaagumo
Nee…..varalaagumo…..

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : உன் சிவலீலை என் வீட்டிலா
சிவலீலை என் வீட்டிலா
அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா….

ஆண் : சிவலீலை என் வீட்டிலா
அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா…

ஆண் : சிவலீலை என் வீட்டிலா

ஆண் : சேவகன் குலம் பார்த்து நாயகன் விளையாட
சேவகன் குலம் பார்த்து நாயகன் விளையாட
காரணம் அறியேனைய்யா
காரணம் அறியேனைய்யா…….

ஆண் : சிவலீலை என் வீட்டிலா
அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா…

ஆண் : சிவலீலை என் வீட்டிலா

ஆண் : தாயற்ற பிள்ளைக்குத் தாயானவன்
தொண்டன் தழுவி மகிழ ஒரு சேயானவன்
தாயற்ற பிள்ளைக்குத் தாயானவன்
தொண்டன் தழுவி மகிழ ஒரு சேயானவன்

ஆண் : கலையானவன் எங்கும் நிலையானவன்
கலையானவன் எங்கும் நிலையானவன்
என் கண்ணீரை அறியாத சிலையானவன்
என் கண்ணீரை அறியாத சிலையானவன்

ஆண் : சிவலீலை என் வீட்டிலா
அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா…

ஆண் : சிவலீலை என் வீட்டிலா

ஆண் : மறைந்தது திருவோடு உன் மாயமோ
உன்னை மனதில் நினைத்ததற்கு இது லாபமோ
மறைந்தது திருவோடு உன் மாயமோ
உன்னை மனதில் நினைத்ததற்கு இது லாபமோ

ஆண் : விதி வேகமோ செய்த வினை வேகமோ
இந்தச் சபையேறிச் சாட்சி சொல்ல வரலாகுமோ
இந்தச் சபையேறிச் சாட்சி சொல்ல வரலாகுமோ
நீ……..வரலாகுமோ……….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here