Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Unakkoru vishayam therivikkavo
Unakkoru vishayam therivikkavo
Ha ullaththin aasaiyai arivikkavo
Sollavo ennendru sollavo
Oooooooh oooooooh

Female : Pallaakku en maeni
Pattaththu raja nee
Pakkam vanthaadavo
Pon manjam en nenjam
Poongannam thaen kinnam
Sontham kondaadavo vaa vaa

Female : Unakkoru vishayam therivikkavo
Ha ullaththin aasaiyai arivikkavo
Sollavo ennendru sollavo
Oooooooh oooooooh

Female : En vaazhvukku neethaan vennilavu
Male : Vennilavukku vaanamthaan uravu
Female : Intha thaamarai poovithazh malaraatho
Male : Antha sooriyan sudar vanthu thazhuvaatho

Female : Udal kodhikkuthu kulirnthida vazhi sollu
Male : Kulir nadhiyinil poe konjam neeraadu
Female : Nee aasaiyillaatha aan magano
Male : Un aasaikku kaaranam naanthaano

Male : Unakkoru vishayam therivikkavo
Ha ullaththin aasaiyai arivikkavo
Sollavo ennendru sollavo
Oooooooh

Male : Maanikkam vaidooriyam aanipon
Ellaam un angam endraanatho
Pavalaththin pettikkul thavazhum nal muththukkal
Parkkal endraanatho

Male : Intha maivizhi pandiyan meen kodiyo
Female : Ilam meen vanthu mugaththinil mithappathundo
Male : Intha puruvangal serananin vil kodiyo
Female : Idhai veerargal kaigalil valaippathundo

Male : Un ezhil nadai sozhanin pulikkodiyo
Female : En inaththaval puliyaiyum virattalaiyo
Male : Nee aasaiyillaatha penn magalo
Female : Un aasaikku kaaranam en azhago

Male : Unakkoru vishayam therivikkavo
Female : Ha ullaththin aasaiyai arivikkavo
Both : Sollavo ennendru sollavo

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ
ஓஓஓஓஓஓஹ் ஓஓஓஓஓஓஹ்

பெண் : பல்லாக்கு என் மேனி
பட்டத்து ராஜா நீ
பக்கம் வந்தாடவோ
பொன் மஞ்சம் என் நெஞ்சம்
பூங்கன்னம் தேன் கிண்ணம்
சொந்தம் கொண்டாடவோ வா வா

பெண் : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ
ஓஓஓஓஓஓஹ் ஓஓஓஓஓஓஹ்

பெண் : என் வாழ்வுக்கு நீதான் வெண்ணிலவு
ஆண் : வெண்ணிலவுக்கு வானம்தான் உறவு
பெண் : இந்த தாமரை பூவிதழ் மலராதோ
ஆண் : அந்த சூரியன் சுடர் வந்து தழுவாதோ

பெண் : உடல் கொதிக்குது குளிர்ந்திட வழி சொல்லு
ஆண் : குளிர் நதியினில் போய் கொஞ்சம் நீராடு
பெண் : நீ ஆசையில்லாத ஆண் மகனோ
ஆண் : உன் ஆசைக்கு காரணம் நான்தானோ

ஆண் : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ என்னென்று சொல்லவோ
ஓஓஓஓஓஓஹ்

ஆண் : மாணிக்கம் வைடூர்யம் ஆணிப்பொன்
எல்லாம் உன் அங்கம் என்றானதோ
பவளத்தின் பெட்டிக்குள் தவழும் நல்முத்துக்கள்
பற்கள் என்றானதோ

ஆண் : இந்த மைவிழி பாண்டியன் மீன் கொடியோ
பெண் : இளம் மீன் வந்து முகத்தினில் மிதப்பதுண்டோ
ஆண் : இந்த புருவங்கள் சேரனின் வில் கொடியோ
பெண் : இதை வீரர்கள் கைகளில் வளைப்பதுண்டோ

ஆண் : உன் எழில்நடை சோழனின் புலிக்கொடியோ
பெண் : என் இனத்தவள் புலியையும் விரட்டலையோ
ஆண் : நீ ஆசையில்லாத பெண் மகளோ
பெண் : உன் ஆசைக்கு காரணம் என் அழகோ

ஆண் : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
பெண் : ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
இருவர் : சொல்லவோ என்னென்று சொல்லவோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here