Singers : Santhosh Narayanan and Dhvani Kailas

Music by : Santhosh Narayanan

Lyrics by : Vivek

Male : Amudha kadal unakku thaan
Aara mazhai unakku thaan
Neenga nizhal unakku thaan
Nee kanmani enakku thaanae

Male : Porundhi po nee tholodu
Madiyil nee oonjal aadu
En paarvai unnodu
Un mullai kannodu
Pesama vinnodu
Naam midhandhu povom

Male : Kaadhoram adi aal olam
Naan thanga marodu
Vaa enadhu thaenae

Humming : ………..

Male : Sandhikka malar unakku thaan
Kandikka mozhi unakku thaan
Sindhikka vazhi unakku thaan
Sirikkum nadhi unakku thaanae

Male : Vazhiyum echil vaai oram
Enadhu kaayam aarum
En thangam munnadi
En kaala kannadi
Un aasai ennadi naan nadathi veippen

Male : Vaazhndhaalum tharai veezhndhaalum
Poo thalae en nenjil vaazha veithaenae

Humming : .……………..

Male : Pathu viral kolam poda
Boomi mela mulaicha chithiramae
Un asaiva parthu paarthu
Aayul kooda enakku

Male : Punnagaiyil kaalam poga
Thogaiyaaga siricha Pettagamae
Yaarukku kinga yaaru kaaval
Mari pochu kanakku

Female : En kuda pesura photova
Unakku nerila kattikava
Enakku pidicha ellam inippum
Sapida tharattuma

Male : Andha aruvi pol
Anba tharuvalae
Chinna arivippum indri
Nenjai suduvalae

Male : Neeyum thummidadi thummidadi
Aayusu nooraga
En aayul unnodu
Pothi vechitaaye

Male : En paarvai unnodu
Un mullai kannodu
Pesama vinnodu
Naam midhandhu povom

Male : Kaadhoram adi aal olam
Naan thanga marodu
Vaa enadhu thaenae

Humming : ………..

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் த்வானி கைலாஸ்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : அமுத கடல் உனக்கு தான்
ஆறா மழை உனக்கு தான்
நீங்கா நிழல் உனக்கு தான்
நீ கண்மணி எனக்கு தானே

ஆண் : பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

ஆண் : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

ஹம்மிங் : ………..

ஆண் : சந்திக்கா மலர் உனக்கு தான்
கண்டிக்கா மொழி உனக்கு தான்
சிந்திக்கா நொடி உனக்கு தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே

ஆண் : வழியும் எச்சில் வாய் ஓரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் கால கண்ணாடி
உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன்

ஆண் : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே

ஹம்மிங் :………………

ஆண் : பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பார்த்து பார்த்து
ஆயுள் கூடும் எனக்கு

ஆண் : புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு

பெண் : என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா …..

ஆண் : அந்த அருவி போல்
அன்ப தருவாளே
சின்ன அறிவுப்பும்
இன்றி சுடுவாளே

ஆண் : நீயும் தும்மிடுடி தும்மிடுடி
ஆயுசு நூராக
என் உயிர் உன்னோட
பத்திர சொத்தாக
பொதி வெச்சிதாயே

ஆண் : என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

ஆண் : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

ஹம்மிங் : ………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here