Singer : Soolamangalam Rajalakshmi

Music by : T. R. Pappa

Lyrics by : M. K. Aathmanathan

Female : Unakkum enakkum vegudhooram illai
Naan ninaikkadha neramillai
Unnai ninaikkadha neramillai
Unakkum enakkum vegudhooram illai
Naan ninaikkadha neramillai
Unnai ninaikkadha neramillai

Female : Inikka inikka nee pesavillai
Endraalum en nenjam marakkavillai

Female : Unakkum enakkum vegudhooram illai
Naan ninaikkadha neramillai
Unnai ninaikkadha neramillai

Female : Selva parambaraiyil pirandhaalum
Adhan singaara pidiyil valarnthathillai
Selva parambaraiyil pirandhaalum
Adhan singaara pidiyil valarnthathillai
Ullasa ulagathil irundhaalum
Naan uzhaippavar thuyarathai maranthathillai
Maranthathillai

Female : Unakkum enakkum vegudhooram illai
Naan ninaikkadha neramillai
Unnai ninaikkadha neramillai

Female : Iravukku nilavaal azhagu varum
En idhayam un ninaivaal amaidhi perum
Iravukku nilavaal azhagu varum
En idhayam un ninaivaal amaidhi perum
Uyirukku udalaal perumai varum
Namm uravum orunal pudhumai perum
Pudhumai perum

Female : Unakkum enakkum vegudhooram illai
Naan ninaikkadha neramillai
Unnai ninaikkadha neramillai

பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை
நான் நினைக்காத நேரமில்லை
உன்னை நினைக்காத நேரமில்லை
உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை
நான் நினைக்காத நேரமில்லை
உன்னை நினைக்காத நேரமில்லை

பெண் : இனிக்க இனிக்க நீ பேசவில்லை
என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை

பெண் : உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை
நான் நினைக்காத நேரமில்லை
உன்னை நினைக்காத நேரமில்லை

பெண் : செல்வப் பரம்பரையில் பிறந்தாலும்
அதன் சிங்காரப் பிடியில் வளர்ந்ததில்லை
செல்வப் பரம்பரையில் பிறந்தாலும்
அதன் சிங்காரப் பிடியில் வளர்ந்ததில்லை
உல்லாச உலகத்தில் இருந்தாலும்
நான் உழைப்பவர் துயரத்தை மறந்ததில்லை
மறந்ததில்லை

பெண் : உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை
நான் நினைக்காத நேரமில்லை
உன்னை நினைக்காத நேரமில்லை

பெண் : இரவுக்கு நிலவால் அழகு வரும்
என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
இரவுக்கு நிலவால் அழகு வரும்
என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
உயிருக்கு உடலால் பெருமை வரும்
நம் உறவும் ஒருநாள் புதுமை பெறும்
உயிருக்கு உடலால் பெருமை வரும்
நம் உறவும் ஒருநாள் புதுமை பெறும்
புதுமை பெறும்

பெண் : உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை
நான் நினைக்காத நேரமில்லை
உன்னை நினைக்காத நேரமில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here