Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Chorus : ……………….
Male : Ungalin oruvan naan
Iru kangalil pedham yaen
Ungalin oruvan naan
Iru kangalil pedham yaen
Nanum manavanthaan
Male : Naam kattrathu kaiyalavu kallaathathu kadalalavu
Vaazhkkai enbathu sodhanaiyai paaru
Vaanga vendum adhil nootrukku nooru
Chorus : Nootrukku nooru nootrukku nooru
Male : Ungalin oruvan naan
Iru kangalil pedham yaen
Nanum manavanthaan
Nanum manavanthaan
Male : Arivu selvam yaetinil
Mattum undaavatho
Anupavam endroru
Kalviyillaamal ennaavatho
Male : Arivu selvam yaetinil
Mattum undaavatho
Anupavam endroru
Kalviyillaamal ennaavatho
Male : Kodiyinil malargal siripathai paaru
Pani idhzh mella virippathai paaru
Iyarkkai magalin ilakkiyam paaru
Azhagukku vilakkam avalthaan nooru
Chorus : Nootrukku nooru nootrukku nooru
Male : Ungalin oruvan naan
Iru kangalil pedham yaen
Naanum maanavanthaan
Naanum maanavanthaan
Male : Naalaiya pozhuthu namakkaga vidiyum
Maanavan ninaiththaal uruvaakka mudiyum
Naalaiya pozhuthu namakkaga vidiyum
Maanavan ninaiththaal uruvaakka mudiyum
Male : Thottam poda oru samuthaayam
Thottruvippathae paniyaagum
Vaeli pola naam kaaththiruppom
Payirai thinnavaa paarththiruppom
Male : Uzhaippukku sila per kai vilangiduvaar
Unarntha pinnaalae kai vanagiduvaar
Ponnaana naatkal vanthidum neram
Poimaiyum angae vidai pera nerum
Male : Unmaiyum penmaiyum kaappavar yaaro
Maanida piraviyil avarthaan nooru
Male : Ungalin oruvan naan
Iru kangalil pedham yaen
Nanum manavanthaan
Male : Naam kattrathu kaiyalavu kallaathathu kadalalavu
Vaazhkkai enbathu sodhanaiyai paaru
Vaanga vendum adhil nootrukku nooru
Chorus : Nootrukku nooru nootrukku nooru
Nootrukku nooru nootrukku nooru
Nootrukku nooru nootrukku nooru
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
குழு : …………………….
ஆண் : உங்களில் ஒருவன் நான்
இரு கண்களில் பேதம் ஏன்
உங்களில் ஒருவன் நான்
இரு கண்களில் பேதம் ஏன்
நானும் மாணவன்தான்
ஆண் : நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு
வாழ்க்கை என்பது சோதனைப் பாரு
வாங்க வேண்டும் அதில் நூற்றுக்கு நூறு
குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு…..
ஆண் : உங்களில் ஒருவன் நான்
இரு கண்களில் பேதம் ஏன்
நானும் மாணவன்தான்
நானும் மாணவன்தான்
ஆண் : அறிவுச் செல்வம் ஏட்டினில்
மட்டும் உண்டாவதோ
அனுபவம் என்றொரு
கல்வியில்லாமல் என்னாவதோ
ஆண் : அறிவுச் செல்வம் ஏட்டினில்
மட்டும் உண்டாவதோ
அனுபவம் என்றொரு
கல்வியில்லாமல் என்னாவதோ
ஆண் : கொடியினில் மலர்கள் சிரிப்பதைப் பாரு
பனி இதழ் மெல்ல விரிப்பதைப் பாரு
இயற்கை மகளின் இலக்கியம் பாரு
அழகுக்கு விளக்கம் அவள்தான் நூறு
குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு….
ஆண் : உங்களில் ஒருவன் நான்
இரு கண்களில் பேதம் ஏன்
நானும் மாணவன்தான்
நானும் மாணவன்தான்
ஆண் : நாளைய பொழுது நமக்காக விடியும்
மாணவன் நினைத்தால் உருவாக்க முடியும்
நாளைய பொழுது நமக்காக விடியும்
மாணவன் நினைத்தால் உருவாக்க முடியும்
ஆண் : தோட்டம் போட ஒரு சமுதாயம்
தோற்றுவிப்பதே பணியாகும்
வேலி போல நாம் காத்திருப்போம்
பயிரை தின்னவா பார்த்திருப்போம்
ஆண் : உழைப்புக்கு சில பேர் கை விலங்கிடுவார்
உணர்ந்த பின்னாலே கை வணங்கிடுவார்
பொன்னான நாட்கள் வந்திடும் நேரம்
பொய்மையும் அங்கே விடை பெற நேரும்
ஆண் : உண்மையும் பெண்மையும் காப்பவர் யாரோ
மானிட பிறவியில் அவர்தான் நூறு
ஆண் : உங்களில் ஒருவன் நான்
இரு கண்களில் பேதம் ஏன்
நானும் மாணவன்தான்
நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு
வாழ்க்கை என்பது சோதனைப் பாரு
வாங்க வேண்டும் அதில் நூற்றுக்கு நூறு
குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு…..
நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு…..
நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு…..