Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee
Ullangalai purintha iraivanaiyaa
Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee
Ullangalai purintha iraivanaiyaa

Female : Vennei thirudiya un kangalukku
Un veettil thirudiyavan inam theriyum
Vennei thirudiya un kangalukku
Un veettil thirudiyavan inam theriyum

Female : Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee
Ullangalai purintha iraivanaiyaa

Female : Selai thiruda mattum therinthavano
Illai thirudargalai pidikka mudinthavano
Selai thiruda mattum therinthavano
Illai thirudargalai pidikka mudinthavano

Female : Paandavar thamakku mattum thoodhuvano
Illai bakdhargal yaavrkkum naayagano
Paandavar thamakku mattum thoodhuvano
Illai bakdhargal yaavrkkum naayagano

Female : Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee
Ullangalai purintha iraivanaiyaa
Ullangalai purintha iraivanaiyaa

Female : Bhoomiyai paayaaga suruttiyavan
Vaazhvil purushaarththam ennavendru kooriyavan
Bhoomiyai paayaaga suruttiyavan
Vaazhvil purushaarththam ennavendru kooriyavan

Female : Saamikku theriyaatha thirudanillai
Nee sakthi izhanthuvitta gurudanillai
Saamikku theriyaatha thirudanillai
Nee sakthi izhanthuvitta gurudanillai

Female : Kai kodukkavillaiyendraal kangal edharkku
Nee kavalukku illaiyendraal kovil edharkku
Vaadikkaiyaai kodppaen kaigal unakku
En kanavarai thanthu vidu mangai enakku

Female : Unmai therinthirukkum oruvanaiyaa kannaa nee
Ullangalai purintha iraivanaiyaa

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ
உள்ளங்களைப் புரிந்த இறைவனையா
உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ
உள்ளங்களைப் புரிந்த இறைவனையா

பெண் : வெண்ணெய் திருடிய உன் கண்களுக்கு
உன் வீட்டில் திருடியவன் இனம் தெரியும்…..
வெண்ணெய் திருடிய உன் கண்களுக்கு
உன் வீட்டில் திருடியவன் இனம் தெரியும்…..

பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ
உள்ளங்களைப் புரிந்த இறைவனையா

பெண் : சேலை திருட மட்டும் தெரிந்தவனோ
இல்லை திருடர்களைப் பிடிக்க முடிந்தவனோ
சேலை திருட மட்டும் தெரிந்தவனோ
இல்லை திருடர்களைப் பிடிக்க முடிந்தவனோ

பெண் : பாண்டவர் தமக்கு மட்டும் தூதுவனோ
இல்லை பக்தர்கள் யாவர்க்கும் நாயகனோ…..
பாண்டவர் தமக்கு மட்டும் தூதுவனோ
இல்லை பக்தர்கள் யாவர்க்கும் நாயகனோ…..

பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ
உள்ளங்களைப் புரிந்த இறைவனையா
உள்ளங்களைப் புரிந்த இறைவனையா

பெண் : பூமியை பாயாக சுருட்டியவன்
வாழ்வில் புருஷார்த்தம் என்னவென்று கூறியவன்
பூமியை பாயாக சுருட்டியவன்
வாழ்வில் புருஷார்த்தம் என்னவென்று கூறியவன்

பெண் : சாமிக்குத் தெரியாத திருடனில்லை
நீ சக்தி இழந்துவிட்ட குருடனில்லை
சாமிக்குத் தெரியாத திருடனில்லை
நீ சக்தி இழந்துவிட்ட குருடனில்லை

பெண் : கைக் கொடுக்கவில்லையென்றால் கண்கள் எதற்கு
நீ காவலுக்கு இல்லையென்றால் கோவில் எதற்கு
வாடிக்கையாய் கொடுப்பேன் கைகள் உனக்கு
என் கணவரை தந்து விடு மங்கை எனக்கு

பெண் : உண்மை தெரிந்திருக்கும் ஒருவனையா கண்ணா நீ
உள்ளங்களைப் புரிந்த இறைவனையா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here