Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Unaithedi varum edhirkaalam adhai
Therivippathae intha neram
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

Female : Unaithedi varum edhirkaalam adhai
Therivippathae intha neram
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

Male : Malar konda pennodu
Mai sinthum kannodu
Deivangalae neril pesum indru ennodu
Deivangalae neril pesum indru ennodu

Female : Mazhai minnal vanthaalum
Thadai ondru kandaalum
Ennangalae ondru serum intha anbodu
Male : Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

Female : Siraiyaagum en nenjam
Vilaiyaadum en manjam
Thaenaattrilae neentha vendum mella nee konjam
Thaenaattrilae neentha vendum mella nee konjam

Male : Adhil enna un pangu thara vendum
Adhu ingu pothaathendraal meendum
Naanae ketpaen vaa ingu

Male : Pani vannam un kannam
Paal vannam un ennam
Anbenbatho ennai aalum
Inba thaen kinnam

Female : Pudhu vellam neeraada poochinnam nee aada
Pudhu vellam neeraada poochinnam nee aada
Manimuththamae sinthum manjal maeni nee aada
Male : Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

Female : Unaithedi varum edhirkaalam
Male : Adhai therivippathae intha neram
Both : Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உனைத்தேடி வரும் எதிர்காலம் அதை
தெரிவிப்பதே இந்த நேரம்
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

ஆண் : உனைத்தேடி வரும் எதிர்காலம் அதை
தெரிவிப்பதே இந்த நேரம்
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

ஆண் : மலர் கொண்ட பெண்ணோடு
மை சிந்தும் கண்ணோடு
தெய்வங்களே நேரில் பேசும் இன்று என்னோடு
தெய்வங்களே நேரில் பேசும் இன்று என்னோடு

பெண் : மழை மின்னல் வந்தாலும்
தடை ஒன்று கண்டாலும்
எண்ணங்களே ஒன்று சேரும் இந்த அன்போடு
ஆண் : புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

பெண் : சிறையாகும் என் நெஞ்சம்
விளையாடும் என் மஞ்சம்
தேனாற்றிலே நீந்த வேண்டும் மெல்ல நீ கொஞ்சம்
தேனாற்றிலே நீந்த வேண்டும் மெல்ல நீ கொஞ்சம்

ஆண் : அதில் என்ன உன் பங்கு தர வேண்டும்
அது இங்கு போதாதென்றால் மீண்டும்
நானே கேட்பேன் வா இங்கு
பெண் : புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

ஆண் : பனி வண்ணம் உன் கன்னம்
பால்வண்ணம் உன் எண்ணம்
அன்பென்பதோ என்னை ஆளும்
இன்ப தேன் கிண்ணம்

பெண் : புது வெள்ளம் நீராட பூச்சின்னம் நீ ஆட
புது வெள்ளம் நீராட பூச்சின்னம் நீ ஆட
மணிமுத்தமே சிந்தும் மஞ்சள் மேனி நீ ஆட
ஆண் : புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்

பெண் : உனைத்தேடி வரும் எதிர்காலம்
ஆண் : அதை தெரிவிப்பதே இந்த நேரம்
இருவர் : புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here