Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Male : Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru

Female : Maattivittathaaro
Maattikondathaaro
Saerththu vaiththathaaro
Manmatha villukkul anbenum ambukkul

Male : Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru

Female : Mazhai neer adharkenavor gunam illaiyae
Mannil vizhum munnaalae niram illaiyae
Mazhai neer adharkenavor gunam illaiyae
Mannil vizhum munnaalae niram illaiyae

Male : Neerodu suvaiyum niraththodu gunamum
Seraatha pergal ondraathl polae

Female : Manamendru mudikkaamal
Naam kollum uravu
Mudhal iravondrum illaamal
Siru pillai varavu
Male : Yaarodu ingae yaar seruvaaro

Male : Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru

Male : Adikkadi manam yaeno thudikkirathae
Nadippinai nijamaaga padikkirathae
Adikkadi manam yaeno thudikkirathae
Nadippinai nijamaaga padikkirathae

Female : Meiyyaana nadippil nerukkangal yaeno
Poiyaana nadippaal kalakkangal thaano
Male : Nadippaaga irunthaalum sugamaana thudippu
Thudippaana idhayangal adikkaatha adippu
Female : Iniyaatha irandu inaiyaanathingu

Male : Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru

Female : Maattivittathaaro
Maattikondathaaro
Saerththu vaiththathaaro
Manmatha villukkul anbenum ambukkul

Male : Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : இளையராஜா

ஆண் : உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு

பெண் : மாட்டிவிட்டதாரோ
மாட்டிக்கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்

ஆண் : உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு

பெண் : மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே
மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே
மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே
மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே

ஆண் : நீரோடு சுவையும் நிறத்தோடு குணமும்
சேராத பேர்கள் ஒன்றாதல் போலே

பெண் : மணமென்று முடிக்காமல்
நாம் கொள்ளும் உறவு
முதல் இரவொன்றும் இல்லாமல்
சிறு பிள்ளை வரவு
ஆண் : யாரோடு இங்கே யார் சேருவாரோ

பெண் : உன்னையும் என்னையும்
கட்டி இழுக்கிறதே ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுக்கிறதே
அந்த வம்பு கயிறு

ஆண் : அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே
நடிப்பினை நிஜமாக படிக்கிறதே
அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே
நடிப்பினை நிஜமாக படிக்கிறதே

பெண் : மெய்யான நடிப்பில் நெருக்கங்கள் ஏனோ
பொய்யான நடிப்பால் கலக்கங்கள் தானோ
ஆண் : நடிப்பாக இருந்தாலும் சுகமான துடிப்பு
துடிப்பான இதயங்கள் அடிக்காத அடிப்பு
பெண் : இணையாத இரண்டு இணையானதிங்கு

ஆண் : உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு

பெண் : மாட்டிவிட்டதாரோ
மாட்டிக்கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்….

ஆண் : உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here