Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Unthan kaaviya medaiyilae
Naan kavithaigal ezhuthugiraen
Male : Unthan kaaviya medaiyilae
Naan kavithaigal ezhuthugiraen
Antha kamanin poojaiyilae
Naan moganam paadugiraen
Male : Unthan kaaviya medaiyilae
Naan kavithaigal ezhuthugiraen
Female : Paalmozhi pani mozhiyaalae
Dhinam pesidum paingili polae
Oru naalvagai therinil yaeri
Naan naadi vanthaen unnai thaedi
Male : Iruvel vizhi meen vizhiyaalae
Nee yaeviya poonganai kodi
Iruvel vizhi meen vizhiyaalae
Nee yaeviya poonganai kodi
Oru maanikkam poongodi thedi
Naam mayangiduvom vilaiyaadi
Female : Unthan kaaviya medaiyilae
Naan kavithaigal ezhuthugiraen
Antha kamanin poojaiyilae
Naan moganam paadugiraen
Male : Unthan kaaviya medaiyilae
Naan kavithaigal ezhuthugiraen
Male : Aarena odidum vellam
Adhil aayiram pesidum ullam
Aarena odidum vellam
Adhil aayiram pesidum ullam
Kuyil oorvalam pogindra neram
Idhazh oramellaam tamil saaram
Female : En thaaimozhi enbathu naanam
Nee thanthathuthaan pudhu gaanam
En thaaimozhi enbathu naanam
Nee thanthathuthaan pudhu gaanam
Thiru vaaimozhi yaen innum venum
Un vaalipa paarvaigal pothum
Female : Unthan kaaviya medaiyilae
Naan kavithaigal ezhuthugiraen
Antha kamanin poojaiyilae
Naan moganam paadugiraen
Female : Maangani saarodu thaenum
Tharum manthiram unnidam thondrum
Yaengiya kaalangal poga
Naam inainthiruppom sugamaaga
Female : Kalaimaanidam vaangiya saayal
Adhil kaanbathu maragatha vaasal
En kaanikkaiyaai vantha maadhu
Enai kalanthirunthaal inai yaedhu
Female : Unthan kaaviya medaiyilae
Naan kavithaigal ezhuthugiraen
Male : Antha kamanin poojaiyilae
Naan moganam paadugiraen
Both : Unthan kaaviya medaiyilae
Naan kavithaigal ezhuthugiraen
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்
ஆண் : உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்
அந்தக் காமனின் பூஜையிலே
நான் மோகனம் பாடுகிறேன்……..
ஆண் : உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்
பெண் : பால்மொழி பனி மொழியாலே
தினம் பேசிடும் பைங்கிளி போலே
ஒரு நால்வகை தேரினில் ஏறி
நான் நாடி வந்தேன் உன்னைத் தேடி
ஆண் : இருவேல் விழி மீன் விழியாலே
நீ ஏவிய பூங்கணை கோடி
இருவேல் விழி மீன் விழியாலே
நீ ஏவிய பூங்கணை கோடி
ஒரு மாணிக்கப் பூங்கொடி தேடி
நாம் மயங்கிடுவோம் விளையாடி…
பெண் : உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்
அந்தக் காமனின் பூஜையிலே
நான் மோகனம் பாடுகிறேன்……..
பெண் : உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்
ஆண் : ஆறென ஓடிடும் வெள்ளம்
அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்
ஆறென ஓடிடும் வெள்ளம்
அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்
குயில் ஊர்வலம் போகின்ற நேரம்
இதழ் ஓரமெல்லாம் தமிழ்ச் சாரம்
பெண் : என் தாய்மொழி என்பது நாணம்
நீ தந்ததுதான் புது கானம்
என் தாய்மொழி என்பது நாணம்
நீ தந்ததுதான் புது கானம்
திரு வாய்மொழி ஏன் இன்னும் வேணும்
உன் வாலிபப் பார்வைகள் போதும்…
ஆண் : உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்
அந்தக் காமனின் பூஜையிலே
நான் மோகனம் பாடுகிறேன்……..
பெண் : மாங்கனிச் சாறொடு தேனும்
தரும் மந்திரம் உன்னிடம் தோன்றும்
ஏங்கிய காலங்கள் போக
நாம் இணைந்திருப்போம் சுகமாக
பெண் : கலைமானிடம் வாங்கிய சாயல்
அதில் காண்பது மரகத வாசல்
என் காணிக்கையாய் வந்த மாது
எனைக் கலந்திருந்தால் இணை ஏது…….
பெண் : உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்
ஆண் : அந்தக் காமனின் பூஜையிலே
நான் மோகனம் பாடுகிறேன்……..
இருவர் : உந்தன் காவிய மேடையிலே
நான் கவிதைகள் எழுதுகிறேன்