Singer : S. P. Balasubrahmanyam

Music by : Vijayanand

Lyrics by : Vaali

Male : Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
Nadanthathai nee maranthu vidu
Mana kadhavai thiranthu vidu
Yammammaa….aaa….yamma

Male : Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Male : Naanum manithan devan alla theerppu solla
Nilavil kooda kalangamillaiyo
Aanaal idhu en kuttramalla kuraigal solla
Paalum kallum venmai illaiyo

Male : Idhu yaar thavaro adiyon ariyaen
Panivaai malare unai naan piriyaen
Moondru naatkal mounamaaga enna sinthanai
Pothum pothum nee koduththa intha thandanai
Yammammaa….aaa….yamma

Male : Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
Nadanthathai nee maranthu vidu
Mana kadhavai thiranthu vidu
Yammammaa….aaa….yamma

Male : Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Male : Neettum viral mel kobam kondu thaabam kondu
Vilagi sellum veenai illaiyae
Vaazhum varaiyil naanum neeyae neeyum naanae
Imaiyum kannum pagaivarillaiayae

Male : Idhuthaan namakku nedunaal uravu
Idithaan idiththu vizhumaa nilavu
Dhooram vaiththa thaazhampoovil vaasam pogumaa
Thaaram thalli nindrapothum paasaam pogumaa
Yammammaa….aaaa….yamma

Male : Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
Nadanthathai nee maranthu vidu
Mana kadhavai thiranthu vidu
Yammammaa….aaa….yamma

Male : Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : விஜயானந்த்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா…ஆஆ….யம்மா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே..

ஆண் : நானும் மனிதன் தேவன் அல்ல தீர்ப்பு சொல்ல
நிலவில் கூட கலங்கமில்லையோ
ஆனால் இது என் குற்றமல்ல குறைகள் சொல்ல
பாலும் கள்ளும் வெண்மை இல்லையோ

ஆண் : இது யார் தவறோ அடியேன் அறியேன்
பனிவாய் மலரே உனை நான் பிரியேன்
மூன்று நாட்கள் மெளனமாக என்ன சிந்தனை
போதும் போதும் நீ கொடுத்த இந்த தண்டனை
யம்மம்மா…ஆஆ….யம்மா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா…ஆஆ….யம்மா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே..

ஆண் : நீட்டும் விரல் மேல் கோபம் கொண்டு தாபம் கொண்டு
விலகி செல்லும் வீணை இல்லையே
வாழும் வரையில் நானும் நீயே நீயும் நானே
இமையும் கண்ணும் பகைவரில்லையே

ஆண் : இதுதான் நமக்கு நெடுநாள் உறவு
இடிதான் இடித்து விழுமா நிலவு
தூரம் வைத்த தாழம்பூவில் வாசம் போகுமா
தாரம் தள்ளி நின்றபோதும் பாசம் போகுமா
யம்மம்மா……ஆஆஆ….யம்மமம்மமா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா…ஆஆ….யம்மா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here