Singer : Govind Vasantha

Music by : Govind Vasantha

Male : Aiyaavae edhai paarkiraai
Nedu neramaai
Vazhndhadhellam edhirae
Sarugaai veezhgiradho

Male : Aththanai pasamum
Naalpatta yekkamum
Orr nodiyil thuliyai
Thaniyaai kaaigiradho

Male : Paaraiyin mel peru velicham
Thangi sendrae pogiradhae
Thiyagamellaam thalai kunindhae
Mounangalaai azhugiradhae
Uyir saavil mudivathillai

Chorus : Mmm…mmm…mmm…
Mmm…mmm….mmm…mmm…
Mmm…mmm…mmm…
Mmm…mmm….mmm…mmm…

Male : Kaanalae meiyaaga
Pazhagivittaal ingae
Eeramaai thodum nadhigal
Silirpathundo ullae…ae…

Chorus : Aazhathin aazhangalai
Paartha maunathinai
Osai jeyipathundo
Kaalathin dhooram varai
Vergal vitta maram
Saavil uthirvathundo

Chorus : Thannanthaniyae aluthu vittae
Ponadhengae koomaanae
Oppanai thaan kalaintha pinnae
Un mugamaai aanaaiyoo

Male : Kalai saavai madhipathillai
Yegaantha malar sainthathae
Eri meedhilae
Vegirathae thaniyaai
Idhu thaan mudivaa

பாடகர் : கோவிந்த் வசந்தா

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

ஆண் : ஐயாவே எதை பார்க்கிறாய்
நெடு நேரமாய்
வாழ்ந்ததெல்லாம் எதிரே
சருகாய் வீழ்கிறதோ

ஆண் : அத்தனை பாசமும்
நாள்பட்ட ஏக்கமும்
ஓர் நொடியில் துளியாய்
தனியாய் காய்கிறதோ

ஆண் : பாறையின் மேல் பெரு வெளிச்சம்
தங்கி சென்றே போகிறதே
தியாகமெல்லாம் தலை குனிந்தே
மௌனங்களாய் அழுகிறதே
உயிர் சாவில் முடிவதில்லை

குழு : ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்….ம்ம்ம்……ம்ம்ம்….
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : காணலே மெய்யாக
பழகிவிட்டால் இங்கே
ஈரமாய் தொடும் நதிகள்
சிலிர்பதுண்டோ உள்ளே….ஏ….

குழு : ஆழத்தின் ஆழங்களை
பார்த்த மௌனத்தினை
ஓசை ஜெய்பதுண்டோ
காலத்தின் தூரம் வரை
வேர்கள் விட்ட மரம்
சாவில் உதிர்வதுண்டோ

குழு : தன்னந்தனியே அழுது விட்டே
போனதெங்கே கூமானே
ஒப்பனை தான் கலைந்த பின்னே
உன் முகமாய் ஆனாயோ

ஆண் : கலை சாவை மதிப்பதில்லை
ஏகானந்த மலர் சாய்ந்ததே
எரி மீதிலே
வேகிறதே தனியாய்
இது தான் முடிவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here