Singers : Hariharan and Swarnalatha

Music by : Deva

Male : ……………..

Male : Uyirae uyirae nalam thaanaa
Sammathamthaanaa….nijamthaanaa….nimmathithaana
Azhagae nilavin mudhugil
Kavithai ezhuthi rasiththidavaa….aa

Female : Uyirae uyirae enai naanae thanthu vittaenae
Thoduvaanai thottuvittaenae
Anbae nilavai pidiththu
Uyirai madiththu koduththidavaa…

Male : Uyirae uyirae…..

Male : Moochchu vidum tajmahallai naan paarkka
Vittu vittu thaamaraigal thaan pookka

Female : Machcham mattum thottukkolla nee ketkka
Michchayidam kobapattu thaan paarkka

Male : Minminiyae idho idho thaan
Kangalum pesum kadhal vizhaathaan
Santhanamae idho idhothaan
Kungumam poosum kadhal vizhaathaan

Female : En jeevanae……en jeevanae
Un paarvaiyin bodhaiyil naan antha velai

Male : Uyirae uyirae kudai thedi alainthaenae
Unnai moodi nanainthaenae
Anbae kanavi azhaiththu
Parishu koduththu anuppidavaa….aa….

Male : Uyirae uyirae…..

Male : ………………

Female : Chinna chinna kannakkuzhi thaenootta
Ullukkullae unnai thalli thaazhpotta

Male : Adikkadi thottukkollum imai polae
Saththamindri santhikkanum inimaelae

Female : Vandinamae ingae ingaethaan
Mottukkal kosum nerungi varaathae
Sevvidhazh ingae ingaethaan
Muththangal venum urangi vidaathae

Male : En jeevanae……en jeevanae
Kirangiya vizhigalil ilampirai paarththaen

Female : Uyirae uyirae unaiththaanae unarnthaenae
Udaipolae aninthaennae
Anbae needa pagalil
Koondhal iravil maraiththidavaa…..

Male : Uyirae uyirae…..

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ……………………..

ஆண் : உயிரே உயிரே நலம் தானா
சம்மதம் தானா…..நிஜம் தானா…..நிம்மதி தானா…..
அழகே நிலவின் முதுகில்
கவிதை எழுதி ரசித்திடவா…..ஆ…..

பெண் : உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே
தொடுவானைத் தொட்டுவிட்டேனே
அன்பே நிலவைப் பிடித்து
உயிரை மடித்து கொடுத்திடவா…

ஆண் : உயிரே உயிரே…..

ஆண் : மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க
விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க

பெண் : மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க
மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க

ஆண் : மின்மினியே இதோ இதோ தான்
கண்களும் பேசும் காதல் விழாதான்
சந்தனமே இதோ இதோதான்
குங்குமம் பூசும் காதல் விழாதான்

பெண் : என் ஜீவனே…….என் ஜீவனே…..
உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை

ஆண் : உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே
உன்னை மூடி நனைந்தேனே
அன்பே கனவை அழைத்துப்
பரிசுக் கொடுத்து அனுப்பிடவா….ஆ…..

பெண் : உயிரே உயிரே…….

ஆண் : …………………………..

பெண் : சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட
உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட

ஆண் : அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே
சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே

பெண் : வண்டினமே இங்கே இங்கே தான்
மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே
செவ்விதழே இங்கே இங்கே தான்
முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே

ஆண் : என் ஜீவனே…….என் ஜீவனே…..
கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்

பெண் : உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே
உடைப்போலே அணிந்தேனே
அன்பே நீண்ட பகலில்
கூந்தல் இரவில் மறைத்திடவா…

ஆண் : உயிரே உயிரே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here