Singers : Stephen Zechariah and Srinisha Jayaseelan

Music by : Stephen Zechariah

Lyrics by : Mohan Rajan

Male : Enai kollamal kolladhae thaangaadhu nenjam
En uyirellam un vaasam thaan mella veesum

Female : Ada en swaasam un swaasam ondraaga serum
Andha nodi podhum en aasai sollamal therum

Male : Un idhazhlodu serthu enai muludhaaga korthu
Pagal iravellaam paarthaal adhu podhume

Female : Un vizhi rendum koosa pudhu vetkangal pesa
Enai piriyamal anaithaale uyir neelumae

Male : Vaa en uyire vaa en uravae
Unnale en jeevan vaazhudhae

Female : Vaa en uyire vaa en uravae
Unnale en kaadhal vaazhudhae

Female : Unnodu than en manam vaazhudhae
Adhu sollamalae un vasamaanadhae

Male : Unnodu than en nizhal pogudhae
En kannodu thaan un imai moodhae

Male : Thalattum paarvai nee veesa vaa
Un maarbodu naan saaindhu thoonga vaa
Female : Naan ketkkum paadal nee aaga vaa
En uyirellam isaiyaaga sera vaa

Male : Pennae azhiyaadha peranbai naan kattuven
Unnai izhakkaamal por seidhu parisaakuven
Female : Unkai regai mel endhan uyil theetuven
Maranam nerndhaalum unakkaaga uyir meetuven

Male : Vaa en uyire vaa en uravae
Unnale en jeevan vaazhudhae

Female : Vaa en uyire vaa en uravae
Unnale en kaadhal vaazhudhae

Male : Theeramalae vizhi kadhai pesa vaa
Mugam paaramalae un manam sollavaa

Female : Kannalanae en vidhi meera vaa
Un idhazhin varigal vazhiyae enai theda vaa
Neeyaaga maarum varam vaanga vaa
Dhinam kannadi paarthae naan vaazhava

Male : Marudhani pola en kai regai seravaa
Un sivapaana vetkangal poosava

Female : Anbae kadikaara ennaaga nee aagavae
Dhinamum unai suttrum mullaaga naanagiren

Male : Neeyum kadalaaga vandhaal naan aliaiyaagiren
Unai piriyamal unakkullae alai paaigiren

Male : Enai kollamal kolladhae thaangaadhu nenjam
En uyirellam un vaasam thaan mella veesum

Female : Ada en swaasam un swaasam ondraaga serum
Andha nodi podhum en aasai sollamal therum

Male : Un idhazhodu serthu enai muludhaaga korthu
Pagal iravellaam paarthaal adhu podhume

Female : Un vizhi rendum koosa en koochangal pesa
Enai piriyamal anaithaale uyir neelumae

Both : Vaa en uyire vaa en uravae
Unnale en jeevan vaazhudhae
Vaa en uyire vaa en uravae
Unnale en kaadhal vaazhudhae

பாடகர்கள்  : ஸ்டீபன் ஜெசாரியா மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஜெசாரியா

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : எனை கொல்லாமல் கொல்லாதே தாங்காது நெஞ்சம்
என் உயிரெல்லாம் உன்வாசம் தான்மெல்ல வீசும்

பெண் : அட என்சுவாசம் உன்சுவாசம் ஒன்றாக சேரும்
அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும்

ஆண் : உன் இதழோடு சேர்த்து எனை முழுதாக கோர்த்து
பகல் இரவெல்லாம் பார்த்த்தாலே அது போதுமே

பெண் : உன் விழி ரெண்டும் கூச புது வெட்கங்கள் பேச
எனைபிரியாமல் அணைத்தாலே உயிர் நீளுமே

ஆண் : வா என் உயிரே வா என் உறவே
உன்னாலே என் ஜீவன் வாழுதே

பெண் : வா என் உயிரே வா என் உறவே
உன்னாலே என் காதல் வாழுதே

பெண் : உன்னோடு தான் என் மனம் வாழுதே
அது சொல்லாமலே உன் வசமானதே

ஆண் : உன்னோடு தான் என் நிழல் போகுதே
என் கண்ணோடு தான் உன் இமை மூடுதே

ஆண் : தாலாட்டுட்ம் பார்வை நீ வீச வா
உன் மாரோடு நான் சாய்ந்து தூங்க வா

பெண் : நான் கேட்கும் பாடல் நீ ஆக வா
என் உயிரெல்லாம் இசையாக சேர வா

ஆண் : பெண்ணே அழியாத பேரன்பை நான் காட்டுட்வேன்
உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன்

பெண் : உன்கை ரேகை மேல் எந்தன் உயில் தீட்டுட்வேன்
மரணம் நேர்ந்ந்தாலும் உனக்காக உயிர் மீட்டுவேன்

ஆண் : வா என் உயிரே வா என் உறவே
உன்னாலே என் ஜீவன் வாழுதே

பெண் : வா என் உயிரே வா என் உறவே
உன்னாலே என் காதல் வாழுதே

ஆண் : தீராமலே விழி கதை பேச வா
முகம் பாராமலே உன் மனம் சொல்லவா

பெண் : கண்ணாளனே என் விதி மீற வா
உன் இதழின் வரிகள் வழியே எனை தேட வா
நீயாக மாறும் வரம் வாங்க வா
தினம் கண்ணாடி பார்த்தே நான் வாழவா

ஆண் : மருதாணி போல் உன் கை சேரவா
உன் சிவப்பான வெட்கங்கள் பூசவா

பெண் : அன்பே கடிகார எண்ணாக நீ ஆகவே
தினமும் உனை சுற்றும் முள்ளாக நானாகிறேன்

ஆண் : நீயும் கடலாக வந்தால் நான் அலையாகிறேன்
உன்னைபிரியாமல் உனக்குள்ளே அலை பாய்கிறேன்
எனை கொல்லாமல் கொல்லாதே தாங்காது நெஞ்சம்
என் உயிரெல்லாம் உன் வாசம் தான் மெல்ல வீசும்

பெண் : அட என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும்
அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும்

ஆண் : உன் இதழோடு சேர்த்து எனை முழுதாக கோர்த்து
பகல் இரவெல்லாம் பார்த்தாலே அது போதுமே

பெண் : உன் விழி ரெண்டும் கூச என்கூச்சங்கள் பேச
எனை பிரியாமல் அணைத்தாளே உயிர் நீளுமே

இருவர் : வா என் உயிரே வா என் உறவே
உன்னாலே என் ஜீவன் வாழுதே
வா என் உயிரே வா என் உறவே
உன்னாலே என் காதல் வாழுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here