Singer : Mahathi
Music by : G. V. Prakash Kumar
Female : Unai kaanavae
Vizhigal moodinen
Kanavin vazhiyaal
Unai en udan
Ulavu paarpathae
Nilavin thozhilaa
Female : Ithu thaanae
Muthal naal
Ilam kaathal
Thirunaal
Female : Ithu thaanae
Muthal naal
Ilam kaathal
Thirunaal
Female : Vaa nila indru nee
Un vaanaththai vittu
Sendridu thooram
Kann kottum minnalum
Vendaam indru endrae
Sollidum neram
Female : En maeni engum
Megam alaipaayum
Or vetkam kondae
Vaanam niram maarum
Vin meengal vanthae
Veettil kudi yerum
En koonthal pookalum
Gaeli seiyumae
Female : Vaa nila indru nee
Un vaanaththai vittu
Sendridu thooram
Kann kottum minnalum
Vendaam indru endrae
Sollidum neram
Female : Pudhu osaiyil
Uruvam peesuthae
Female : Ethanaal ethanaal
Female : Parigaasamaai
Padhumai paakkuthae
Female : Ethanaal ethanaal
Female : Ithazh oramaai
Thulirum vervaiyai
Female : Thudaiththaal enna
Female : Thadai aagidum
Porvai konjamaai
Female : Udaiththaal enna
Female : Mezhugaaga karainthen
Uyirodu urainthen
Nammakkaana ila maalai
Irul velai varugirathae
Female : Methuvaagavae
Mezhugu deepam
Female : Urugum urugum
Female : Ilai polavae
Iravu naeramum
Uthirum uthirum
Parimaaravum
Pasigal aaravum
Neram engae
Imai moodinaal
Iravu poi vidum
Vaa vaa anbae
Female : Mazhai chaaral
Vizhalaam
Anai thaandi varalaam
Methuvaaga nanaivoma
Nanaivoma vidiyum varai
Female : Vaa nila indru nee
Un vaanaththai vittu
Sendridu thooram
Kann kottum minnalum
Vendaam indru endrae
Sollidum neram
Female : En maeni engum
Megam alaipaayum
Or vetkam kondae
Vaanam niram maarum
Vin meengal vanthae
Veettil kudi yerum
En koonthal pookalum
Gaeli seiyumae
பாடகி : மகதி
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பெண் : உன்னை காணவே விழிகள் மூடினேன்
கனவின் வழியால்
உன்னை என் உடன் உளவு பார்ப்பது
நிலவின் தொழிலா
பெண் : இது தானே முதல் நாள்
இளம் காதல் திருநாள்
இது தானே முதல் நாள்
இளம் காதல் திருநாள்
பெண் : வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்
பெண் : என் மேனி எங்கும்
மேகம் அலைபாயும்
ஓர் வெட்கம் கொண்டே
வானம் நிறம் மாறும்
வின் மீன்கள் வந்தே
வீட்டில் குடி ஏறும்
என் கூந்தல் பூக்களும்
கேலி செய்யுமே
பெண் : வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்
பெண் : புது ஓசையின் உருவம் பேசுதே
பெண் : எதனால் எதனால்
பெண் : பரிகாசமாய் பதுமை பாக்குதே
பெண் : எதனால் எதனால்
பெண் : இதழ் ஓரமாய் குளிரும் வேர்வையே
பெண் : துடித்ததால் என்ன
பெண் : தடையாகிடும் போர்வை கொஞ்சமாய்
பெண் : உடைத்தால் என்ன
பெண் : மெழுகாக கரைந்தேன்
உயிரோடு உறைந்தேன்
நமக்கான இள மாலை
இருள் வேளை வருகிறதே
பெண் : மெதுவாகவே மெழுகு தீபம்
உருகும் உருகும்
இலை போலவே
இரவு நேரமும் உதிரும் உதிரும்
பரிமாறவும் பசிகள் ஆறவும் நேரம் எங்கே
இமை மூடினால் இரவு
போய் விடும் வா வா அன்பே
பெண் : மழை சாரல் விழலாம்
அணை தாண்டி வரலாம்
நகராமல் நனைவோம்
நனைவோம் விடியும் வரை
பெண் : வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்
பெண் : என் மேனி எங்கும்
மேகம் அலைபாயும்
ஓர் வெட்கம் கொண்டே
வானம் நிறம் மாறும்
வின் மீன்கள் வந்தே
வீட்டில் குடி ஏறும்
என் கூந்தல் பூக்களும்
கேலி செய்யுமே