Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Vaa vaa… kanmani… vaa vaa… aa… kanmani…
Vaa vaa kanmani vaasal thaedi vaa
Vaa vaa kanmani vaasal thaedi vaa
Vaanam illaiyael vaadum vennilaa

Female : Vaa vaa mannavaa vaasal thaedi vaa
Vaa vaa mannavaa vaasal thaedi vaa
Vaanam illaiyael vaadum vennilaa

Male : Vaa vaa kanmani

Female : Thodangiyadhu isai mazhai ingae
Thodarndhu vandha pagaivargal engae
Muzhanguvadhu sudhandhira geetham
Vazhanguvadhu sugam tharum naadham

Male : Sudhigalin oliyai yaar
Siraigalil adaippadhu

Female : Surangalai yaar avan
Karangalil pidippadhu

Male : Isaiyin vazhi idhayangal kooda
Idaiyil sila thadaigalai poda
Kadandhu varum kalainjanin paattu
Thaduppadhevar vilangugal pottu

Female : Aayiram rasigargal
Yaavarum nam vasam

Male : Aanandha geethathil
Thondridum paravasam
Vaavaa vaavaa anbae…

Female : Vaa vaa mannavaa vaasal thaedi vaa

Male : Vaa vaa kanmani vaasal thaedi vaa

Male : Iruvar nenjil pala vagai kaayam
Isaiyil avai marandhidum maayam
Irandu kuyil inaindhidum naalum
Iravu pagal isaithidum gaanam

Female : Dhevanin theerppidhu
Yaar idhai maruppadhu

Male : Kaadhal thaan endrumae
Kadaisiyil jeyippadhu

Female : Unadhu nizhal enakkillai endru
Uyirai vida ninaithadhu undu
Unadhu thunai kidaithadhu ingu
Uyirai vida uyarndhadhu endru

Male : Raagamum thaalamum or vagai mooligai
Sogangal theerndhana poothadhu poo nagai
Vaavaa vaavaa anbae…

Male : Vaa vaa kanmani vaasal thaedi vaa

Female : Vaa vaa mannavaa vaasal thaedi vaa

Male : Vaanam illaiyael vaadum vennilaa

Female : Vaanam illaiyael vaadum vennilaa

Male : Vaa vaa kanmani vaasal thaedi vaa

Female : Vaa vaa mannavaa vaasal thaedi vaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வா வா… கண்மணி… வா வா… ஆ… கண்மணி…
வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா கண்மணி வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா
வா வா மன்னவா வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

ஆண் : வா வா கண்மணி

பெண் : தொடங்கியது இசை மழை இங்கே
தொடர்ந்து வந்த பகைவர்கள் எங்கே
முழங்குவது சுதந்திர கீதம்
வழங்குவது சுகம் தரும் நாதம்

ஆண் : சுதிகளின் ஒலியை யார்
சிறைகளில் அடைப்பது

பெண் : சுரங்களை யார் அவன்
கரங்களில் பிடிப்பது

ஆண் : இசையின் வழி இதயங்கள் கூட
இடையில் சில தடைகளை போட
கடந்து வரும் கலைஞனின் பாட்டு
தடுப்பதெவர் விலங்குகள் போட்டு

பெண் : ஆயிரம் ரசிகர்கள்
யாவரும் நம் வசம்

ஆண் : ஆனந்த கீதத்தில்
தோன்றிடும் பரவசம்
வாவா வாவா அன்பே…

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா

ஆண் : இருவர் நெஞ்சில் பல வகை காயம்
இசையில் அவை மறைந்திடும் மாயம்
இரண்டு குயில் இணைந்திடும் நாளும்
இரவு பகல் இசைத்திடும் கானம்

பெண் : தேவனின் தீர்ப்பிது யார் இதை மறுப்பது

ஆண் : காதல்தான் என்றுமே
கடைசியில் ஜெயிப்பது

பெண் : உனது நிழல் எனக்கில்லை என்று
உயிரை விட நினைத்தது உண்டு
உனது துணை கிடைத்தது இங்கு
உயிரை விட உயர்ந்தது என்று

ஆண் : ராகமும் தாளமும் ஓர் வகை மூலிகை
சோகங்கள் தீர்ந்தன பூத்தது பூ நகை
வாவா வாவா அன்பே…….

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா

ஆண் : வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

பெண் : வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here