Singers : T. M. Soundararajan and Banumathi

Music by : G. Ramanathan

Male : Vaadaa malarae thamizh thaenae
Vaadaa malarae thamizh thaenae
En vaazhvin suvaiyae
Oli veesum pudhu nilavae

Male : Vaadaa malarae thamizh thaenae

Female : Aaraavamudhae enadhanbae
Aaraavamudhae enadhanbae
Enaiyaalum azhaghae
Thamizhaaghum kadalil vandha

Female : Aaraavamudhae enadhanbae

Male : Thaarani vanangum mannan
Thani perum thaerae
Thaarani vanangum mannan
Thani perum thaerae
Tharikkumo en uyir unai pirindhaal
Tharikkumo en uyir unai pirindhaal

Female : Vaanum kadalum
Thisai naalum maarinum
Naam ennaalum piriyom
Vaanum kadalum
Thisai naalum maarinum
Naam ennaalum piriyom

Male : Kaadhal vaazhvil sudar
Veesum jothiyaai
Kaadhal vaazhvil sudar
Veesum jothiyaai
Kaalamellaam vaazhndhiduvom
Kaalamellaam vaazhndhiduvom

Female : Kaaviya pulavarellaam
Kalippudan paaraatti
Kaaviya pulavarellaam
Kalippudan paaraatti
Kavidhai pozhiyum pughazh
Naam kaanuvom
Kavidhai pozhiyum pughazh
Naam kaanuvom

Both : Endrum aaraavamudhae enadhanbae
Enaiyaalum azhaghae
Thamizhaaghum kadalil vandha
Aaraavamudhae enadhanbae…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : வாடா மலரே தமிழ் தேனே
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே

ஆண் : வாடா மலரே தமிழ் தேனே

பெண் : ஆறாவமுதே எனதன்பே
ஆறாவமுதே எனதன்பே
என்னை ஆளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த

பெண் : ஆறாவமுதே எனதன்பே

ஆண் : தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே

ஆண் : தரிக்குமோ
என் உயிர் உனைப் பிரிந்தால்
தரிக்குமோ
என் உயிர் உனைப் பிரிந்தால்

பெண் : வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந்நாளும் பிரியோம்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்

ஆண் : காதல் வாழ்வில்
சுடர் வீசும் ஜோதியாய்
காதல் வாழ்வில்
சுடர் வீசும் ஜோதியாய்

ஆண் : காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்

பெண் : காவியப் புலவரெல்லாம்
களிப்புடன் பாராட்டி
காவியப் புலவரெல்லாம்
களிப்புடன் பாராட்டி

பெண் : கவிதை பொழியும்
புகழ் நாம் காணுவோம்
கவிதை பொழியும்
புகழ் நாம் காணுவோம்

இருவர் : என்றும் ஆறாவமுதே எனதன்பே
என்னை ஆளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த

இருவர் : ஆறாவமுதே எனதன்பே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here