Singers : T. K. S. Nadarajan and Chaya

Music by : Rajesh Khanna

Male : Vaadipatti sandhaiyilae vanginen rendu kaala maadu
Yerapotta pogaiyilae otha matta kaanalaiyae
Adi ennadi naan seiven edha nenachu azhuven
Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female : Manasa vittudadha machaan maadu ponaa pogattum
Mavaraasa nee irundha maadu nooru vaangikalaam
Enna paaru maama nee idhukku azhuvalaama
Nugathadiya naan pudichaa yeru uzhu maama

Male : Kaanju kedakkuthadi vayalu karuvaada pochuthadi
Penja mazhai ellam indha boomikkae sariyaachudhadi
Adi ennadi naan seiven edha nenachu azhuven
Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female : Oothukkaeni thondikuvom machaan
Oorum thanniya yerachukkuvom
Paathi katti machaan naama
Payiru senju pozhachikkuvom
Enna paaru maama nee idhukku azhuvazhaamaa
Yer ikku kaiyirukku veredhukku bayam unakku

Male : Vayasu vandha ponna pola
Valarndhu irukku payira ippo
Vayadhaana kilavan thalapola veluthu thaanae poiyiduchu
Adi ennadi naan seiven edha nenachu azhuven
Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female : Samanju irukkum ponnu kooda sadhai pudikka naalum aagum
Thoothi adichaa payiru machaan marundhu vacha seriya pogum
Enna paaru maama nee idhukku azhuvazhaamaa
Marundhu vaangu maamaa adha serndhadippom naama

Male : Arukka aalu kidaikaladi pulla adichu thootha edamilladi
Surukka mudichaathaanae townukku kondu poga thunai illaiyae
Adi ennadi naan seiven edha nenachu azhuven
Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female : Veveramaana aalu machaan
Neeyum vekkanketta aalu machaan
Ada chee poo machaan
Veveramaana aalu machaan neeyum
Vekkanketta aalu machaan
Surukka thaanae parisam potta
Indha sirukki un kooda varuvaa

Both : Thannanathaana thana thaananaananan naana….(4)

பாடகர்கள் : டி. கே. எஸ். நடராஜன் மற்றும் சாயா

இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா

ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன் ரெண்டு காள மாடு
ஏரப் பூட்ட போகையிலே ஒத்த மாட்ட காணலையே
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண் : மனச விட்டுடாதே மச்சான் மாடு போனா போகட்டுமே
மவராசா நீயிருந்தா மாடு நூறு வாங்கிக்கலாம்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
நுகத்தடிய நான் புடிச்சா ஏர உழு மாமா

ஆண் : காஞ்சு கெடக்குதடி வயலு கருவாடா போச்சுதடி
பேஞ்ச மழை எல்லாம் இந்த பூமிக்கே சரியாச்சுதடி
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண் : ஊத்துக் கேணி தோண்டிக்குவோம் மச்சான்
ஊறும் தண்ணிய எறச்சுக்குவோம்
பாத்தி கட்டி மச்சான் நாம
பயிரு செஞ்சு பொழைச்சுக்குவோம்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
ஏரிருக்கு கையிருக்கு வேறெதுக்கு பயம் உனக்கு

ஆண் : வயசு வந்த பொண்ணப் போல வளர்ந்து இருக்கு பயிரு இப்போ
வயதான கெழவன் தலப்போல வெளுத்து தானே போயிடுச்சு
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண் : சமஞ்சு இருக்கும் பொண்ணு கூட சதை புடிக்க நாளும் ஆகும்
தூத்தி அடிச்சா பயிரு மச்சான் மருந்து வச்சா சரியா போகும்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
மருந்த வாங்கு மாமா அதை சேர்ந்தடிப்போம் நாம

ஆண் : அறுக்க ஆளு கெடைக்கலடி புள்ள அடிச்சு தூத்த எடமில்லடி
சுருக்கா முடிச்சுத்தானே டவுனுக்கு கொண்டு போக துணையில்லையே
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண் : வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்
வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்
சுருக்காத்தானே பரிசம் போட்டா இந்த சிறுக்கி உனக்கு கூட வருவா

இருவர் : தன்னானதானா தனதானானன்னனானா
தன்னானதானா தனதானானன்னனானா
தன்னானதானா தனதானானன்னனானா….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here