Singers : T. M. Soundarajan, P. Susheela, L. R. Eswari and K. Swarna
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Ponvandu……ponvandu……ponvandu…..
Male : Vaadiyamma
Vaadiyamma malligaippoo nee
Vaadi vizhatha vaasanaippoo
Un vaadikkaikkaaran naanthaan
Vanthidunga thanthiduga
Inbam pongum thaenthaan
Female : Thevai thevaiyendru poovai edhirpaarththu
Vandu paranthaadumo
Kovai idhazh meedhu kothu kilipola
Kolam varainthaadumo
Male : Vaan thodum megaththai polae
Unai naan thodum mogaththinaalae
Panimalar konda kani idhazh konjam
Sivanthathuthaan pogumo
Female : Mani vizhi mella mayangiyae thannai
Maranthuthaan pogumo…..
Male : Haehaehae
Female : Ponvandu……ponvandu……ponvandu…..
Male : Vaadiyamma thamaraippoo
Vasanthamammaa un sirippu
Un vaadikkaikkaaran naanthaan
Vanthidunga thanthiduga
Inbam pongum thaenthaan
Female : Ilaiyuthirkaalam netru
Thalir vidum kaalma indru
Ilaiyuthirkaalam netru
Thalir vidum kaalma indru
Male : Pooviriththa kodi kaai
Sumanthapadi vaa vaa vaa
Naan ninaiththapadi
Poo parikka idam thaa thaa thaa
Female : Malarthottam engengae
Male : Varum vandu angaengae
Female : Malarthottam engengae
Male : Varum vandu angaengae
Female : Ondralla inbangal oraayiram
Male : Haehaehae
Female : Ponvandu……ponvandu……ponvandu…..
Male : Vaadiyamma shenpagappoo dhinam
Valarumamma nam santhippu
Un vaadikkaikkaaran naanthaan
Un vaadikkaikkaaran naanthaan
Vanthiduga thanthiduga
Inbam pongum thaenthaan
Male : Vaadiyamma…….
Female : Chittukkal thottuththaan
Ondraiyondru konjuthu
Chittukkal thottuththaan
Ondraiyondru konjuthu
Thennaiyum thendralum
Onnukkonnu pinnuthu
Male : Unnodu ennullam
Pinnodu varuthu
Ennenna undo
Nee kannodu ezhuthu
Female : Poovaattam ennai eduththu
Oru vellottam mella nadaththu
Poovaattam ennai eduththu
Oru vellottam mella nadaththu
Male : Pollaatha naanam illaatha neram
Paaraattu ennai anaiththu
Male : Haehaehae
Female : Ponvandu……ponvandu……ponvandu…..
Male : Vaadiyamma rojappoo
Enai vaattuthamma un ninaippu
Un vaadikkaikkaaran naanthaan
Un vaadikkaikkaaran naanthaan
Vanthidunga thanthiduga
Inbam pongum thaenthaan
Male : Vaadiyamma…….
Female : Vayathu pathinezhu valarga ilamaathu
Ullam unathallavaa
Male : Vizhigal naankodum vazhinthu purandodum
Vellam namathallavaa
Female : Nooru tharam kettu tharuvathu undu
Male : Ketkaamal eduththu kolvathu indru
Female : Indru thottu naalai mattum
Alli alli anaiththu
Male : Michamindri meedhamindri
Solli solli koduththu
Female : Innum innum pakkam vanthu
Ennennavo sollavo
Male : Vaadiyamma…….
Female : Ponvandu……ponvandu……ponvandu…..
Male : Vaadiyamma…….
Female : Ponvandu……ponvandu……ponvandu…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுஷீலா,
எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஸ்வர்ணா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
பெண் : பொன்வண்டு…..பொன்வண்டு……பொன்வண்டு…
ஆண் : வாடியம்மா
வாடியம்மா மல்லிகைப்பூ நீ
வாடி விழாத வாசனைப்பூ
உன் வாடிக்கைக்காரன் நான்தான்
வந்திடுக தந்திடுக
இன்பம் பொங்கும் தேன்தான்
பெண் : தேவை தேவையென்று பூவை எதிர்ப்பார்த்து
வண்டு பறந்தாடுமோ
கோவை இதழ் மீது கொத்து கிளிபோல
கோலம் வரைந்தாடுமோ
ஆண் : வான் தொடும் மேகத்தை போலே
உனை நான் தொடும் மோகத்தினாலே
பனிமலர் கொண்ட கனி இதழ் கொஞ்சம்
சிவந்துதான் போகுமோ
பெண் : மணி விழி மெல்ல மயங்கியே தன்னை
மறந்துதான் போகுமோ……..
ஆண் : ஹேஹேஹே…..
பெண் : பொன்வண்டு பொன்வண்டு….பொன்வண்டு….
ஆண் : வாடியம்மா தாமரைப்பூ
புது வசந்தமம்மா உன் சிரிப்பு
உன் வாடிக்கைக்காரன் நான்தான்
வந்திடுக தந்திடுக
இன்பம் பொங்கும் தேன்தான்
பெண் : இலையுதிர்காலம் நேற்று
தளிர் விடும் காலம் இன்று
இலையுதிர்காலம் நேற்று
தளிர் விடும் காலம் இன்று
ஆண் : பூவிரித்த கொடி காய்
சுமந்தபடி வா வா வா
நான் நினைத்தபடி
பூ பறிக்க இடம் தா தா தா
பெண் : மலர்த்தோட்டம் எங்கெங்கே
ஆண் : வரும் வண்டு அங்கங்கே
பெண் : மலர்த்தோட்டம் எங்கெங்கே
ஆண் : வரும் வண்டு அங்கங்கே
பெண் : ஒன்றல்ல இன்பங்கள் ஓராயிரம்
ஆண் : ஹேஹேஹே…..
பெண் : பொன்வண்டு பொன்வண்டு….பொன்வண்டு….
ஆண் : வாடியம்மா செண்பகப்பூ தினம்
வளருமம்மா நம் சந்திப்பு
உன் வாடிக்கைக்காரன் நான்தான்
உன் வாடிக்கைக்காரன் நான்தான்
வந்திடுக தந்திடுக
இன்பம் பொங்கும் தேன்தான்
ஆண் : வாடியம்மா………………..
பெண் : சிட்டுக்கள் தொட்டுத்தான்
ஒன்றையொன்று கொஞ்சுது
சிட்டுக்கள் தொட்டுத்தான்
ஒன்றையொன்று கொஞ்சுது
தென்னையும் தென்றலும்
ஒண்ணுக்கொண்ணு பின்னுது…..
ஆண் : உன்னோடு என்னுள்ளம்
பின்னோடு வருது
என்னென்ன உண்டோ
நீ கண்ணோடு எழுது
பெண் : பூவாட்டம் என்னை எடுத்து
ஒரு வெள்ளோட்டம் மெல்ல நடத்து
பூவாட்டம் என்னை எடுத்து
ஒரு வெள்ளோட்டம் மெல்ல நடத்து
ஆண் : பொல்லாத நாணம் இல்லாத நேரம்
பாராட்டு என்னை அணைத்து
ஆண் : ஹேஹேஹே…..
பெண் : பொன்வண்டு பொன்வண்டு….பொன்வண்டு….
ஆண் : வாடியம்மா ரோஜாப்பூ
எனை வாட்டுதம்மா உன் நினைப்பு
உன் வாடிக்கைக்காரன் நான்தான்
உன் வாடிக்கைக்காரன் நான்தான்
வந்திடுக தந்திடுக
இன்பம் பொங்கும் தேன்தான்
ஆண் : வாடியம்மா………………..
பெண் : வயது பதினேழு வளர்க இளமாது
உள்ளம் உனதல்லவா
ஆண் : விழிகள் நான்கோடும் வழிந்து புரண்டோடும்
வெள்ளம் நமதல்லவா
பெண் : நூறு தரம் கேட்டு தருவது உண்டு
ஆண் : கேட்காமல் எடுத்துக் கொள்வது இன்று
பெண் : இன்று தொட்டு நாளை மட்டும்
அள்ளி அள்ளி அணைத்து
ஆண் : மிச்சமின்றி மீதமின்றி
சொல்லி சொல்லிக் கொடுத்து
பெண் : இன்னும் இன்னும் பக்கம் வந்து
என்னென்னவோ சொல்லவோ…..
ஆண் : வாடியம்மா………………..
பெண் : பொன்வண்டு பொன்வண்டு….பொன்வண்டு….
ஆண் : வாடியம்மா………………..
பெண் : பொன்வண்டு பொன்வண்டு….பொன்வண்டு….