Singers : A. M. Raja and Jikki
Music by : S. N. Thirupathi
Lyrics by : Puratchi Dasan
Male : Vaan madhiyaagiyae naam ulavalaam
Vaan madhiyaagiyae naam ulavalaam
Iruntharung kaadhalae indha naalilae
Both : Iruntharung kaadhalae indha naalilae
Vaan madhiyaagiyae naam ulavalaam
Female : Sirandha poojolaiyil kadhaigal sollalaam
Thirandha vaan meedhinil parandhu
sellalaam
Kaadhalin nesamae anbilaagumae
Eedilla jodiyaai dhinamum vaazhalaam
Both : Iruntharung kaadhalae indha naalilae
Vaan madhiyaagiyae naam ulavalaam
Male : Manadhellaam un isai geethankaanudhae
Idhayathin aasaiyum thazhuva naadudhae
Mangaiyin dharisanam mogamaaguthae
Ennilaa inbathin alaigal aadudhae
Both : Iruntharung kaadhalae indha naalilae
Vaan madhiyaagiyae naam ulavalaam
Female : Maeviya ganamae thendral pesudhae
Maeviya ganamae thendral pesudhae
Sobitha paadalai kelum maranae
Sobitha paadalai kelum maranae
Thooya en jeevanai kaanungaalaiyil
Oviyam roobamaai sindhu paadudhae
Both : Iruntharung kaadhalae indha naalilae
Vaan madhiyaagiyae naam ulavalaam
Male : Un madhivadhana mel ulagang kaanuthae
Punnagai kannamae pavalaamaaguthae
Aaruyir kokkila amuthasurabhiyae
Aaruyir kokkila amuthasurabhiyae
Meettuvom paavaiyae madhura veenaiyil
Aavalaai konjiyae idhaya geethandhaan
Both : Iruntharung kaadhalae indha naalilae
Vaan madhiyaagiyae naam ulavalaam
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி
பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்
ஆண் : வான் மதியாகியே நாமுலாவலாம்
வான் மதியாகியே நாமுலாவலாம்
இதந்தருங் காதலே இந்த நாளிலே
இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே
வான் மதியாகியே நாமுலாவலாம்
பெண் : சிறந்த பூஞ்சோலையில் கதைகள் சொல்லலாம்
திறந்த வான் மீதினில் பறந்து செல்லலாம்
காதலின் நேசமே அன்பிலாகுமே
ஈடிலா ஜோடியாய் தினமும் வாழலாம்
இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே
வான் மதியாகியே நாமுலாவலாம்
ஆண் : மனதெல்லாம் உன் இசை கீதங்காணுதே
இதயத்தின் ஆசையும் தழுவ நாடுதே
மங்கையுன் தரிசனம் மோகமாகுதே
எண்ணிலா இன்பத்தின் அலைகளாடுதே
இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே
வான் மதியாகியே நாமுலாவலாம்
பெண் : மேவிய காணமே தென்றல் பேசுதே
மேவிய காணமே தென்றல் பேசுதே
சோபித பாடலைக் கேளும் மாரனே
சோபித பாடலைக் கேளும் மாரனே
தூய என் ஜீவனைக் காணுங்காலையில்
ஓவியம் ரூபமாய் சிந்து பாடுதே…
இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே
வான் மதியாகியே நாமுலாவலாம்
ஆண் : உன் மதிவதன மேல் உலகங் காணுதே
புன்னகைக் கன்னமே பவளமாகுதே
ஆருயிர் கோகிலா அமுதசுரபியே
ஆருயிர் கோகிலா அமுதசுரபியே
மீட்டுவோம் கோகில அமுதசுரபியே
மீட்டுவோம் பாவையே மதுர வீணையில்
ஆவலாய் கொஞ்சியே இதயகீதந்தான்….
இருவர் : இதந்தருங் காதலே இந்த நாளிலே
வான் மதியாகியே நாமுலாவலாம்a