Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Aa.. ha..ha
Vaanai maranthu nindra puvi yedhu
Mazhaiyai maranthu nindra payir yedhu
Aadal maranthu nindra mayil yedhu
Aasai maranthu nindra hm ha
Aasai maranthu nindra
Manam yedhu.. manam yedhu

Female : Ilaiyil amarum paniyum thuyilum
Thugilum paniyum nilavum thazhuvum

Female : Vaanathil kaalaiyilae oru
Aadhavanai kandaal
Mounathil kaadhalilae aval
Malar polae nindraal
Nerukku nerr irundhum
Aval nenjm pesavillai
Adhu ninaivoo illai kanavoo
Adhai ketkkum thunivum illai

Female : Sottu sottu…sottu sottu
Vellam vandhaal
Ondrai ondru pinni kondu ondraagum
Muthu muthu ennam vandhaal
Munnum pinnum kannum nenjum thalladum
Aval solvaalo thunai kolvaalo
Thannai velvaalo

Female : Thaamarai nenjam ingae oliyaaga
Aadhavan nenjam sellum vazhiyaaga
Thoodhu solvorum illai
Thunaiyaaga ennai thuyavan
Kaanavillai thelivaaga

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ….ஹஹா……
வானை மறந்து நின்ற புவி ஏது
மழையை மறந்து நின்ற பயிர் ஏது
ஆடல் மறந்து நின்ற மயில் ஏது
ஆசை மறந்து நின்ற ஹும்…ஆஹ்….
ஆசை மறந்து நின்ற
மனம் ஏது மனம் ஏது

பெண் : இலையில் அமரும் பனியும் துயிலும்
துகிலும் பனியும் நிலவும் தழுவும்

பெண் : வானத்தில் காலையிலே
ஒரு ஆதவனைக் கண்டாள்
மௌனத்தில் காதலிலே
அவள் மலர் போலே நின்றாள்
நேருக்கு நேர் இருந்தும்
அவள் நெஞ்சம் பேசவில்லை
அது நினைவோ இல்லை கனவோ
அதை கேட்கும் துணிவும் இல்லை

பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டு
வெள்ளம் வந்தால்
ஒன்றையொன்று பின்னிக் கொண்டு ஒன்றாகும்
முத்து முத்து எண்ணம் வந்தால்
முன்னும் பின்னும் கண்ணும் நெஞ்சும் தள்ளாடும்
அவள் சொல்வாளோ துணைக் கொள்வாளோ
தன்னை வெல்வாளோ

பெண் : தாமரை நெஞ்சம் இங்கே ஒளியாக
ஆதவன் நெஞ்சம் செல்லும் வழியாக
தூது சொல்வோரும் இல்லை
துணையாக என்னை தூயவன்
காணவில்லை தெளிவாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here