Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Azhagiya pennae
Neeyor adhisaya nilavo
Theyaamal neeyirukka
Dhinamum unai paarththu naanallavo
Theigiren….mmm….thaeigiren….mm….theigiraen

Male : Vaanam illaamal megam illaamal
Ulavum nilavenna neeyo
Neenthum un meni yaenthum
Pon vaanam naano

Female : Un kadhal kondaadum
Kavithai ellaamae thaeno
En aasai ennangal
Yaavum unnodu thaano

Male : Vaanam illaamal megam illaamal
Ulavum nilavenna neeyo
Neenthum un meni yaenthum
Pon vaanam naano

Male : Kaamadevan keerthanam
Kaadhil kettatho
Kaadhil ketta velaiyil
Kadhal pooththatho

Female : Un ilakkiyam ezhuthidum yaedu
En idhazhgal aaga vendum
En ennangal urangidum koodu
En idhayam aaga vendum

Male : En paadalgal suranthidum keni
Paavaiyum thirumeni

Female : Vaanam illaamal megam illaamal
Ulavum nilavenna naano
Neenthum un meni yaenthum
Pon vaanam neeyo…

Female : Kaattril aadum poonthalir poovai soodavaa
Poovai soodum poovai naan maalai soodavo

Male : Oru thalaivanum thalaiviyum kooda
Kai thazhuvi thazhuvi kondu aada
Nam ninaivugal nadhiyena oda
Naam nerungi nerungi inbam theda

Female : Nam uravugal kaninthidum kaalam
Maalaigal manakkolam

Male : Vaanam illaamal megam illaamal
Ulavum nilavenna neeyo
Neenthum un meni yaenthum
Pon vaanam naano

Female : Un kadhal kondaadum
Kavithai ellaamae thaeno
En aasai ennangal
Yaavum unnodu thaano

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழகிய பெண்ணே
நீயோர் அதிசய நிலவோ
தேயாமல் நீயிருக்க
தினமும் உனைப் பார்த்து நானல்லவோ
தேய்கிறேன்……ம்ம்ம்…தேய்கிறேன்…..ம்ம்….தேய்கிறேன்

ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ….

பெண் : உன் காதல் கொண்டாடும்
கவிதை எல்லாமே தேனோ
என் ஆசை எண்ணங்கள்
யாவும் உன்னோடு தானோ……

ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ….

ஆண் : காமதேவன் கீர்த்தனம்
காதில் கேட்டதோ
காதில் கேட்ட வேளையில்
காதல் பூத்ததோ

பெண் : உன் இலக்கியம் எழுதிடும் ஏடு
என் இதழ்கள் ஆக வேண்டும்
உன் எண்ணங்கள் உறங்கிடும் கூடு
என் இதயம் ஆக வேண்டும்

ஆண் : என் பாடல்கள் சுரந்திடும் கேணி
பாவையுன் திருமேனி…….

பெண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நானோ
நீந்தும் என் மேனி ஏந்தும்
பொன் வானம் நீயோ…..

பெண் : காற்றில் ஆடும் பூந்தளிர் பூவை சூடவா
பூவை சூடும் பூவை நான் மாலை சூடவோ

ஆண் : ஒரு தலைவனும் தலைவியும் கூட
கைத் தழுவி தழுவி கொண்டு ஆட
நம் நினைவுகள் நதியென ஓட
நாம் நெருங்கி நெருங்கி இன்பம் தேட

பெண் : நம் உறவுகள் கனிந்திடும் காலம்
மாலைகள் மணக்கோலம்……

ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நீயோ
நீந்தும் உன் மேனி ஏந்தும்
பொன் வானம் நானோ….

பெண் : உன் காதல் கொண்டாடும்
கவிதை எல்லாமே தேனோ
என் ஆசை எண்ணங்கள்
யாவும் உன்னோடு தானோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here