Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Vaanam nilavai maranthathu
Maranthathu
Adhu malaraai boomiyil piranthathu
Piranthathu
Malarai thottam maranthathu
Adhu mangai vadivil valarnthathu

Female : Mangai vadivil valarnthathu
Valarnthathu
Oru mannavan vadivai kandathu kandathu
Kangal irandum kalanthathu
Adhu kaalai paarthu nadanthathu

Female : Mangai vadivil valarnthathu
Valarnthathu
Oru mannavan vadivai kandathu kandathu

Male : Kaalai paarthu nadanthathu
Perum karunai mazhaiyai pozhindhathu
Pesum kannai thiranthathu
Adhil penmai muzhudhum vazhindhathu

Female : Penmai muzhudhum vazhindhathu
Adhu pesum vaegam thaninthathu
Menmai udalil niraindhathu
Manam megam poale alaindhathu

Male : Vaanam nilavai maranthathu
Maranthathu
Adhu malaraai boomiyil piranthathu
Piranthathu

Male : Megam polae alaindhathu
Perum vellaamaagi vizhunthathu
Nadhiyaai ulagil nadanthathu
Indha naayagan kadalil kalanthathu

Female : Naayagan kadalil kalanthathu
Ini naalum avanae endrathu
Kaaiyaai irunthu kaninthathu
Uyar kaadhal kadhavum thiranthathu

Male : Vaanam nilavai maranthathu
Maranthathu
Adhu malaraai boomiyil piranthathu
Piranthathu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது
மலரைத் தோட்டம் மறந்தது
அது மங்கை வடிவில் வளர்ந்தது…..

பெண் : மங்கை வடிவில் வளர்ந்தது
வளர்ந்தது
ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது
கண்கள் இரண்டும் கலந்தது
அது காலை பார்த்து நடந்தது…..

பெண் : மங்கை வடிவில் வளர்ந்தது
வளர்ந்தது
ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது

ஆண் : காலை பார்த்து நடந்தது
பெரும் கருணை மழையை பொழிந்தது
பேசும் கண்ணை திறந்தது
அதில் பெண்மை முழுதும் வழிந்தது

பெண் : பெண்மை முழுதும் வழிந்தது
அது பேசும் வேகம் தணிந்தது
மென்மை உடலில் நிறைந்தது
மனம் மேகம் போலே அலைந்தது…..

ஆண் : வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது

ஆண் : மேகம் போலே அலைந்தது
பெரும் வெள்ளமாகி விழுந்தது
நதியாய் உலகில் நடந்தது
இந்த நாயகன் கடலில் கலந்தது

பெண் : நாயகன் கடலில் கலந்தது
இனி நாளும் அவனே என்றது
காயாய் இருந்து கனிந்தது
உயர் காதல் கதவும் திறந்தது…..

ஆண் : வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here