Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Poovai Sengkuttuvan

Male : Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu

Male : Unnaiththaan ninaiththaen
Kangalaal anaiththaen
Ennai naan koduththaen

Female : Mullai malarnthathu mella siriththathu
Ullam kulirnthathu ulagai maranthathu

Male : Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu

Male : Angam engum thanga kattithaano
Ezhil pongum mangai kangal enna meeno
Angam engum thanga kattithaano
Ezhil pongum mangai kangal enna meeno
Iravethu pagalenbathaethu
Oru idaivelai namakindru yaethu

Male : Sevvidhazh oram ovvoru naalum
Manmatha raagam paadavaa paadavaa paadavaa

Male : Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu

Female : Vanna vanna poo malarnthathu aadum
Angu vandu vanthu sontham kondu paadum
Perinbam aarambam aagum
Indru pesaatha naadagam thondrum

Female : Ketpathu kidaikkum kidaippathu inikkum
Thevaikku athigam thevaiyo thevaiyo

Male : Vaanam pozhinthathu bhoomi nanainthathu
Gaanam piranthathu kadhal malarnthathu
Devi inainthathu thaenum kalanthathu

Male : Muthu muthu punnagaiyai kandaen
En muthamizhai muthamida vanthaen
Muthu muthu punnagaiyai kandaen
En muthamizhai muthamida vanthaen

Female : Alaiyodu alai vanthu mothum
Manam anantha raagangal paadum

Male : Ennangal inikka
Female : Kannangal sivakka
Male : Inbangal kodi
Female : Kaanavaa
Male : Kaanavaa
Female : Kaanavaa…

Both : ………………..

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது

ஆண் : உன்னைத்தான் நினைத்தேன்
கண்களால் அணைத்தேன்
என்னை நான் கொடுத்தேன்…..

பெண் : முல்லை மலர்ந்தது மெல்லச் சிரித்தது
உள்ளம் குளிர்ந்தது உலகை மறந்தது

ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது

ஆண் : அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ
எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ
அங்கம் எங்கும் தங்கக் கட்டிதானோ
எழில் பொங்கும் மங்கை கண்கள் என்ன மீனோ
இரவேது பகலென்பதேது
ஒரு இடைவேளை நமக்கின்று ஏது

ஆண் : செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும்
மன்மத ராகம் பாடவா பாடவா பாடவா

ஆண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது

பெண் : வண்ண வண்ண பூ மலர்ந்து ஆடும்
அங்கு வண்டு வந்து சொந்தம் கொண்டு பாடும்
பேரின்பம் ஆரம்பம் ஆகும்
இன்று பேசாத நாடகம் தோன்றும்

பெண் : கேட்பது கிடைக்கும் கிடைப்பது இனிக்கும்
தேவைக்கு அதிகம் தேவையோ தேவையோ

பெண் : வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவன் இணைந்தது தேனும் கலந்தது

ஆண் : முத்து முத்து புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்
முத்து முத்து புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்

பெண் : அலையோடு அலை வந்து மோதும்
மனம் ஆனந்த ராகங்கள் பாடும்

ஆண் : எண்ணங்கள் இனிக்க
பெண் : கன்னங்கள் சிவக்க
ஆண் : இன்பங்கள் கோடி
பெண் : காணவா
ஆண் : காணவா
பெண் : காணவா…

இருவர் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here