Singers : S. Janaki and Jency

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Female : Vaanaththu poongili maanena vaazhnthaval
Mannil veezhnthaalammaa
Endrum kanneeril vaazhnthaalammaa
Endrum kanneeril vaazhnthaalammaa

Female : Vaanaththu poongili maanena vaazhnthaval
Mannil veezhnthaalammaa
Endrum kanneeril vaazhnthaalammaa
Endrum kanneeril vaazhnthaalammaa

Female : Kadhal nambikkai kanagaala aanaal
Kadavul nambikkai ennaavatho
Vedham solvonae pagaiyaagi ponaal
Yaarai nampiththaan pen vaazhvatho

Female : Oruvanin kaaladi sugamendru vanthaen
Sendraen nizhal polavae
Raman ena uruthi sonnaan
Raavananaai maarivittaan

Female : Vaanaththu poongili maanena vaazhnthaval
Naalai vaazhvaalammaa
Kaalam maarida kaanpaalammaa
Kaalam maarida kaanpaalammaa

Female : Naalai pozhuthendrum nalamaagumendru
Nambi vaazhnthaalthaan pen vaazhalaam
Tholil azhagaaga manamaalai soodum
Sorkkam oruvelai nee kaanalaam

Female : Ulagaththu vaazhkkaiyil nadakaathathenna
Thozhi kalangaathiru
Oru pozhuthu avarkku vanthaal
Marupozhuthu unakku varum

Female : Vaanaththu poongili maanena vaazhnthaval
Naalai vaazhvaalammaa
Kaalam maarida kaanpaalammaa
Kaalam maarida kaanpaalammaa

Female : Pennin kanneerai sugamaaga paarththaen
Innum varavillai en deivamae
Intha kanneerum pazhi vaangi theerum
Idhu en sollaalla avan sonnathu

Female : Naan konda vedhanai ennennavendru
Ingae solvathu
Ragasiyaththil azhuthu vidu
Mana sumaiyai irakki vidu

Female : Vaanaththu poongili maanena vaazhnthaval
Naalai vaazhvaalammaa
Kaalam maarida kaanpaalammaa
Kaalam maarida kaanpaalammaa….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா……

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா……

பெண் : காதல் நம்பிக்கை கனலாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ

பெண் : ஒருவனின் காலடி சுகமென்று வந்தேன்
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உறுதி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…….

பெண் : நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால் தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்

பெண் : உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…….

பெண் : பெண்ணின் கண்ணீரை சுகமாக பார்த்தேன்
இன்னும் வரவில்லை என் தெய்வமே
இந்த கண்ணீரும் பழி வாங்கி தீரும்
இது என் சொல்லல்ல அவன் சொன்னது

பெண் : நான் கொண்ட வேதனை என்னென்னவென்று
இங்கே சொல்வது………
ரகசியத்தில் அழுது விடு…….
மனச் சுமையை இறக்கி விடு

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here