Singer : L. R. Eswari

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Female : Hello vaanga sir vaanga
Vaadikkaiyaaga neega
Hello vaanga sir vaanga
Vaadikkaiyaaga neega
Veliyor sarakku ulloor sarakku
Vendiyathellaam irukku

Female : Vaanga sir vaanga
Vaadikkaiyaaga neega
Veliyor sarakku ulloor sarakku
Vendiyathellaam irukku

Female : Gopura kondai kuthikkaal seruppu
Idaiyil kuttai paavaadai
Gopura kondai kuthikkaal seruppu
Idaiyil kuttai paavaadai
Inth ilavattam mugaththukku cigarette edhukku
Koodaathammaa pugai vaadai

Female : Vasathi irukku aiyyaavukku
Asathiyai pokka varuvaaru
Ivar vagai vagaiyaa cigarettetai
Pugai pugaiyaaha viduvaaru
Kup kup kup kup

Female : Vaanga sir vaanga
Chorus : Chachchaa

Female : Keezhe lungi melae jippaa
Idaiyilae thondhi eduppaa
Keezhe lungi melae jippaa
Idaiyilae thondhi eduppaa
Puliyampatti mainaru
Ivaru puliyai sutta veeraru
Puliyampatti mainaru
Ivaru puliyai sutta veeraru

Female : Naattu sarakka keppaaru
Adha pottukittu paappaaru
Onnaa iruppathu rendaa theriyum
Anjukku paaththaa kodupaaru

Chorus : Chachchaa
Female : Vaanga sir vaanga

Female : Periya idaththu ragasiyam ellaam
Pechilae ingu veliyaagum
Periya idaththu ragasiyam ellaam
Pechilae ingu veliyaagum
Naan ketukka maatten kandukka maattaen
Ketukka maatten kandukka maattaen
Yaeval seivathu en paniyaagum

Female : Kettathai kodukkum sonnathai seiyyum
Chinna paiyanai kavanikkanum
Manasula pattathai veliyila solaen
Thavaraa irunthaa mannikkanum
Chorus : Chachchaa

Female : Vaanga sir vaanga
Vaadikkaiyaaga neega
Veliyor sarakku ulloor sarakku
Vendiyathellaam irukku

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஹலோ வாங்க சார் வாங்க
வாடிக்கையாக நீங்க
வாங்க சார் வாங்க
வாடிக்கையாக நீங்க
வெளியூர் சரக்கு உள்ளூர் சரக்கு
வேண்டியதெல்லாம் இருக்கு…

பெண் : வாங்க சார் வாங்க
வாடிக்கையாக நீங்க
வெளியூர் சரக்கு உள்ளூர் சரக்கு
வேண்டியதெல்லாம் இருக்கு…

பெண் : கோபுர கொண்டை குதிக்கால் செருப்பு
இடையில் குட்டை பாவாடை
கோபுர கொண்டை குதிக்கால் செருப்பு
இடையில் குட்டை பாவாடை
இந்த இளவட்டம் முகத்துக்கு சிகரெட் எதுக்கு
கூடாதம்மா புகை வாடை….

பெண் : வசதி இருக்கு ஐயாவுக்கு
அசதியை போக்க வருவாரு
இவர் வகை வகையாக சிகரெட்டை
புகை புகையாக விடுவாரு…..
குப் குப் குப் குப்

பெண் : வாங்க சார் வாங்க
குழு : சச்சா

பெண் : கீழே லுங்கி மேலே ஜிப்பா
இடையிலே தொந்தி எடுப்பா
கீழே லுங்கி மேலே ஜிப்பா
இடையிலே தொந்தி எடுப்பா
புளியம்பட்டி மைனரு
இவரு புலியை சுட்ட வீரரு
புளியம்பட்டி மைனரு
இவரு புலியை சுட்ட வீரரு

பெண் : நாட்டுச் சரக்கா கேப்பாரு
அதப் போட்டுக்கிட்டு பாப்பாரு
ஒண்ணா இருப்பது ரெண்டா தெரியும்
அஞ்சுக்கு பாத்தா கொடுப்பாரு…

குழு : சச்சா
பெண் : வாங்க சார் வாங்க

பெண் : பெரிய இடத்து ரகசியம் எல்லாம்
பேச்சிலே இங்கு வெளியாகும்
பெரிய இடத்து ரகசியம் எல்லாம்
பேச்சிலே இங்கு வெளியாகும்
நான் கேட்டுக்க மாட்டேன் கண்டுக்க மாட்டேன்
கேட்டுக்க மாட்டேன் கண்டுக்க மாட்டேன்
ஏவல் செய்வது என் பணியாகும்

பெண் : கேட்டதை கொடுக்கும் சொன்னதை செய்யும்
சின்னப் பையனை கவனிக்கணும்
மனசுல பட்டதை வெளியில சொல்வேன்
தவறா இருந்தா மன்னிக்கணும்….
குழு : சச்சா

பெண் : வாங்க சார் வாங்க
வாடிக்கையாக நீங்க
வெளியூர் சரக்கு உள்ளூர் சரக்கு
வேண்டியதெல்லாம் இருக்கு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here