Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Ammaaa…..aaa….
Vaanilae mannilae neerilae poovilae
Ellaam needhaanamma
Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma
Un madiyilae ennai seeraattammaa

Female : Vaanilae mannilae neerilae poovilae
Ellaam needhaanamma
Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma
Un madiyilae ennai seeraattammaa

Female : Chinnachinnamaam pookalilae
Devi un naatiyam kanden….kanden
Sittu koottangal vaarthaiyilae
Nee paada naa ketten
Ilaiyilae… pinjilae… kaayilae…. kaniyilae

Female : Ellaam needhaanamma
Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma
Un madiyilae ennai seeraattammaa…ammaaa

Female : Naaraigal ellaam thavam seiyum
Nandugal ellaam nadamaadum
Koraiyum naanalum asaindhadum
Kolangal devi un vilaiyattu
Malaiyilae… maduvilae… nadhiyilae… alaiyilae

Female : Ellaam needhaanamma
Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma
Un madiyilae ennai seeraattammaa

Female : Uyirgal yaavum en sondham
Undhan nizhalae en manjam
Iyarkai neeyae en annai
Iyarkai neeyae en annai
Engum kanden naan unnai
Kannilae …kanavilae… nenjilae… ninaivilae

Female : Ellaam needhaanamma
Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma
Un madiyilae ennai seeraattammaa…ammaa

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அம்மா……..ஆஅ…..
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா

பெண் : வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா

பெண் : சின்ன சின்னமாம் பூக்களிலே
தேவி உன் நாட்டியம் கண்டேன்…….கண்டேன்
சிட்டு கூட்டங்கள் வார்த்தையிலே
நீ பாட நான் கேட்டேன்
இலையிலே….பிஞ்சிலே…..காயிலே…..கனியிலே

பெண் : எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா……அம்மா

பெண் : நாரைகள் எல்லாம் தவம் செய்யும்
நண்டுகள் எல்லாம் நடமாடும்
கோரையும் நாணலும் அசைந்தாடும்
கோலங்கள் தேவி உன் விளையாட்டு
மலையிலே…..மதுவிலே……நதியிலே…..அலையிலே

பெண் : எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா……

பெண் : உயிர்கள் யாவும் என் சொந்தம்
உந்தன் நிழலே என் மஞ்சம்
இயற்க்கை நீயே என் அன்னை
இயற்க்கை நீயே என் அன்னை
எங்கும் கண்டேன் நான் உன்னை
கண்ணிலே…..கனவிலே……நெஞ்சிலே…..நினைவிலே

பெண் : எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா……அம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here