Singer : Vignesh G

Music by : Radhan

Male : …………………………..

Chorus : ………………………

Male : Vaanodum mannodum
Mudivumillai
Indha vaazhvodum irudhi illai

Male : Nee siragaanaal
Indha vaan peridhillaiyae
Ullamae ezhuga
Uyaram thoduga

Male : Nettrai indrai
Eruvaakkavaa
Naalai ondrai
Uruvaakkavaa

Male : Saer endraal…
Nee poovaayiru
Kadal endraal…
Nee theevaayiru

Male : Hei….ulipatta malaidhaan
Silaiyaagum
Udaipatta vidhaidhaan
Maramaagum
Nadanthathai maranthidu
Kavalaigal maarum

Male : Oru muttrupulli undu
Vaakkiyathil
Endha vaazhkaiyum
Muttrupulli peruvadhillai
Ilai veezhndhu pona pinnum
Kilai theerndhu povadhillai
Ullamae ezhuga
Uyaram thoduga

Male : Nettrai indrai
Eruvaakkavaa
Naalai ondrai
Uruvaakkavaa

Male : Aaaa….aaa….aaa…..aaa….aaa….
Aaaaa….aaa….aaa…..aaa….aaa…
Aaaa…..aaa….aaa….aa……

Male : Vaanodum mannodum
Mudivumillai
Indha vaazhvodum irudhi illai

பாடகர் : விக்னேஷ் ஜி

இசையமைப்பாளர் : ராதன்

ஆண் : ………………..

குழு : …………………

ஆண் : வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை

ஆண் : நீ சிறகானால்
இந்த வான் பெரிதில்லையே
உள்ளமே எழுக
உயரம் தொடுக

ஆண் : நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா

ஆண் : சேற் என்றால்….
நீ பூவாய் இரு
கடல் என்றால்….
நீ தீவாய் இரு

ஆண் : ஹேய்…உள்பட்ட மலைதான்
சிலையாகும்
உடைபட்ட விதைதான்
மரமாகும்
நடந்ததை மறந்திடு
கவலைகள் மாறும்

ஆண் : ஒரு முற்றுப்புள்ளி உண்டு
வாக்கியத்தில்
எந்த வாழ்க்கையும்
முற்றுப்புள்ளி பெறுவதில்லை
இலை வீழ்ந்து போன பின்னும்
கிளை தீர்ந்து போவதில்லை
உள்ளமே எழுக
உயரம் தொடுக

ஆண் : நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா

ஆண் : ஆஆஆஆ….ஆஆஆ…
ஆஆஆ…ஆஆஆ…ஆஆஆ….
ஆஆஆஆ….ஆஆஆ…
ஆஆஆ…ஆஆஆ…ஆஆஆ….
ஆஆஆஆ….ஆஆஆ…ஆஆஆ…ஆஆ

ஆண் : வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here