Singer : Sriram Parthasarathy

Music by : Yuvan Shankar Raja

Male : Vaanthooral en tholgal melae
Vaalaattum naalae
Per iruttil en kangal meedhae
Minnum minminiyae

Male : Vidhaiyai puratti pottalum
Vinnai parthu thaan mulaikkum
Per anbinaal vazhkaiyin
Konalgal nerpadum

Male : Paruvam kadanthu ponalum
Arugampullu saagathu
Oor thooralil mothamaai
Patchaiyaai maaridum

Male : Vaanthooral en tholgal melae
Vaalaattum naalae
Per iruttil en kangal meedhae
Minnum minminiyae

Male : Aaaa…aaa..haaa…..
Haaa…aaaa…aaa…..
Nirisani dhanipa magamapa….
Nirisani dhanipa magamapa….

Male : Engae sendru veezhvathendru
Sinthum mazhai arinthathillai
Sondha bandham yaar vasam endru
Thedum uyir therinthathillai

Male : Megamattra vaanathin keezhae
Thagamuttra paravaiyai polae
Yedhumattru parantha podhum
Naadum thunaigal

Male : Eerapadham katril irunthaal
Thoorathilae kaadu therinthaal
Pakkam thaanae neer nilai endru
Pesum kuralgal

Male : Vaanthooral en tholgal melae
Vaalaattum naalae

Male : Mella thaanae sollum maarum
Solli thaanae sogam theerum
Vaazhum aasai ullaperkae
Vazhkai endrumae inikkum

Male : Oonappatta jeevan yedhum
Pattiniyaal saavathillai
Engo sellum erumbu kooda
Irai kodukkum

Male : Megam mattum vaanamillai
Dhegam mattum vazhkaiyillai
Pulangalai kadanthu kooda
Inbam irukkum

Male : Vaanthooral en tholgal melae
Vaalaattum naalae
Per iruttil en kangal meedhae
Minnum minminiyae

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

ஆண் : விதையை புரட்டி போட்டாலும்
விண்ணை பார்த்து தான் முளைக்கும்
பேர் அன்பினால் வாழ்க்கையின்
கோணல்கள் நேர்படும்

ஆண் : பருவம் கடந்து போனாலும்
அருகம்புல்லு சாகாது
ஓர் தூரலில் மொத்தமாய்
பச்சையாய் மாறிடும்

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

ஆண் : ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ… ஆ
நிரிசனி தனிப மகமப
நிரிசனி தனிப மகமப

ஆண் : எங்கே சென்று வீழ்வதென்று
சிந்தும் மழை அறிந்ததில்லை
சொந்த பந்தம் யார் வசம் என்று
தேடும் உயிர் தெரிந்ததில்லை

ஆண் : மேகமற்ற வானத்தின் கீழே
தாகம்முற்ற பறவையை போலே
ஏதுமற்று பறந்த போதும்
நாடும் துணைகள்

ஆண் : ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்திலே காடு தெரிந்தால்
பக்கம் தானே நீர் நிலை என்று
பேசும் குரல்கள்

ஆண் : வான்தூரல் என் தோள்கள்
மேலே வாலாட்டும் நாளே

ஆண் : மெல்ல தானே சொல்லும் மாறும்
சொல்லி தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ளபேர்க்கே
வாழ்க்கை என்றுமே இனிக்கும்

ஆண் : ஊனப்பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவதில்லை
எங்கோ செல்லும் எறும்பு கூட
இரை கொடுக்கும்

ஆண் : மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை
புலன்களை கடந்து கூட
இன்பம் இருக்கும்

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here