Singers : T. M. Soundarajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma

Male : Vanam naanadi kannamma
Vatta nilavu neethaan en sellamma
Vanam naanadi kannamma
Vatta nilavu neethaan en sellamma
Vatta nilavu neethaan en sellamma

Male : Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma

Female : Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa

Female : Raagam nee ingu kannaiya
Rasiga paavam naanthane sellaiyaa
Rasiga paavam naanthane sellaiyaa

Female : Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa

Female : {Vizhiyil veeram vilangumbothu
Katta bomman pole
Anbai vari vari vazhangumbothu
Vallal karnan pole.. vallal karnan pole..}(2)

Male : Uvamai koorum uruvam yaavum
Unathu sontham kanne
Uvamai koorum uruvam yaavum
Unathu sontham kanne
Ennai madiyil pathi maarbil pathi
Vaangikonde pinnae
Vaangikonde pinnae..

Female : Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa

Male : Pagalil kooda paruva meani
Nilavu pola kaayum
Pakkam nerungum pothu vetkam kondu
Nadippathenna neeyum.. nadippathenna neeyum

Female : Unnai minjum nadigan innum
Ulagil thondravillai
Unnai minjum nadigan innum
Ulagil thondravillai
Unthan nizhalil nindru kavithai paadum
Naalum intha killai.. naalum intha killai..

Male : Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma

பாடகர்கள் :  டி. எம். சௌந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர்  : வாலி

ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா

ஆண் : வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா

ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா

பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா

பெண் : ராகம் நீ இங்கு கண்ணையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா

பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா

பெண் : {விழியில் வீரம் விளங்கும் போது
கட்ட பொம்மன் போலே
அன்பை வாரி வாரி வழங்கும் போது
வள்ளல் கர்ணன் போலே..வள்ளல் கர்ணன் போலே} (2)

ஆண் : உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
என்னை மடியில் பாதி மார்பில் பாதி
வாங்கிக் கொண்ட பின்னே
வாங்கிக் கொண்ட பின்னே….

பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா

ஆண் : பகலில் கூட பருவ மேனி
நிலவு போல காயும்
பக்கம் நெருங்கும் போது வெட்கம் கொண்டு
நடிப்பதென்ன நீயும்…நடிப்பதென்ன நீயும்

பெண் : உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உந்தன் நிழலில் நின்று கவிதை பாடும்
நாளும் இந்தக் கிள்ளை.. நாளும் இந்தக் கிள்ளை..

ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here