Singer : T. M. Soundararajan
Music by : Kunnakudi Vaidyanathan
Lyrics by : Kannadasan
Male : Vaazhkkaiyae bodhai naadagam
Vaalipam kadhal kaaviyam
Umarkayaam potta oviyam
Naalai endru ondru illa indru vaa
Male : Haa vaazhkkaiyae bodhai naadagam
Vaalipam kadhal kaaviyam
Male : Panneeril thiraatchai pallaakku methai
Panthaadum maithaanagal
Sivalogamaa sugalogamaa
Chorus : ………….
Male : Adhuvarai pogum anantham ingae undu
Madhurasam kaattum maayangal engae undu
Vedhangal koorum ragasiyam pennil undu
Chorus : Laalalalaalaallaa
Male : Sariyedhu thvaredhu evanai ketpathu
Male : Vaazhkkaiyae bodhai naadagam
Vaalipam kadhal kaaviyam
Chorus : …………….
Male : Ammangal ingae aaraththi ingae
Abhishegam seiyyungalaen
Kadal vendumaa nadhi vendumaa
Male : Theerththangal aadu paavangal theernthae vidum
Deviyin poojai seithaal punniyam varum
Thiruvilaiyaadal enbathuthaanae varum
Chorus : …………….
Male : Aragaraa sivasiva saranam neeyappaa
Male : Vaazhkkaiyae bodhai naadagam
Vaalipam kadhal kaaviyam
Umarkayaam potta oviyam
Naalai endru ondru illa indru vaa
Male : Haa vaazhkkaiyae bodhai naadagam
Vaalipam kadhal kaaviyam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வாழ்க்கையே போதை நாடகம்
வாலிபம் காதல் காவியம்
உமர்கயாம் போட்ட ஓவியம்
நாளை என்று ஒன்று இல்லை இன்று வா
ஆண் : ஹா வாழ்க்கையே போதை நாடகம்
வாலிபம் காதல் காவியம்
ஆண் : பன்னீரில் திராட்சை பல்லாக்கு மெத்தை
பந்தாடும் மைதானங்கள்…….
சிவலோகமா சுகலோகமா
குழு : …………………..
ஆண் : அதுவரை போகும் ஆனந்தம் இங்கே உண்டு
மதுரசம் காட்டும் மாயங்கள் எங்கே உண்டு
வேதங்கள் கூறும் ரகசியம் பெண்ணில் உண்டு
குழு : லாலலலாலால்லா
ஆண் : சரியெது தவறெது எவனைக் கேட்பது
ஆண் : வாழ்க்கையே போதை நாடகம்
வாலிபம் காதல் காவியம்
குழு : …………………..
ஆண் : அம்மன்கள் இங்கே ஆரத்தி இங்கே
அபிஷேகம் செய்யுங்களேன்
கடல் வேண்டுமா நதி வேண்டுமா
ஆண் : தீர்த்தங்கள் ஆடு பாவங்கள் தீர்ந்தே விடும்
தேவியின் பூஜை செய்தால் புண்ணியம் வரும்
திருவிளையாடல் என்பது தானே வரும்
குழு : ……………….
ஆண் : அரகரா சிவசிவ சரணம் நீயப்பா
ஆண் : வாழ்க்கையே போதை நாடகம்
வாலிபம் காதல் காவியம்
உமர்கயாம் போட்ட ஓவியம்
நாளை என்று ஒன்று இல்லை இன்று வா
ஆண் : வாழ்க்கையே போதை நாடகம்
வாலிபம் காதல் காவியம்