Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Aa…..aa….aa….aa…..aa……

Female : Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Antha mangaiyin vazhikkandu vaazhvathil sugam undu
Ilakkiyam aval paathai….aa…aa…aa…aa…
Ilakkiyam aval paathai….aa…aa…

Female : Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai

Female : Aazhkkadal aanaalum aayiram aanaalum
Avaravar vithippadiyae
Aazhkkadal aanaalum aayiram aanaalum
Avaravar vithippadiyae
Aandavan sriraman maanidan yaemaanthaan
Adhu avan vidhi vazhiyae….

Female : Gangaiyil yamunaiyil pudhu vellam varumpothu
Kaadugal sezhikkindrana
Mangaiyar vaazhnaalil manavinai mudinthaalae
Manathugal kulirkindrana….aa…aa….aa…
Manathugal kulirkindrana….aa…aa….aa…aa…..aa…..

Female : Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai

Female : Idhuve sugamendru ennivittaal pothum
Adhuve sugamaaividum
Idhuve sugamendru ennivittaal pothum
Adhuve sugamaaividum
Inbamo thunbamo veliyinil illai
Idhayaththil uruvaaividum

Female : Mangalam kuraiyaamal manjalum azhiyaamal
Vaazhvathu nalamallavaa
Manavinai naalandru vedhiyar palar sollum
Manthiram adhuvallavaa……aa…aa….aa…aa….
Manthiram adhuvallavaa……aa…aa….aa…

Female : Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ…..ஆ…….ஆ……ஆ……..ஆ…….

பெண் : வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
அந்த மங்கையின் வழிக்கண்டு வாழ்வதில் சுகம் உண்டு
இலக்கியம் அவள் பாதை ஆ………ஆ……..ஆ……ஆ….
இலக்கியம் அவள் பாதை ஆ…..ஆ……..

பெண் : வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை

பெண் : ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்
அவரவர் விதிப்படியே………
ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்
அவரவர் விதிப்படியே………
ஆண்டவன் ஸ்ரீராமன் மானிடன் ஏமாந்தான்
அது அவன் விதி வழியே…….

பெண் : கங்கையில் யமுனையில் புது வெள்ளம் வரும்போது
காடுகள் செழிக்கின்றன……..
மங்கையர் வாழ்நாளில் மணவினை முடிந்தாலே
மனதுகள் குளிர்கின்றன ஆ……..ஆ…….ஆ……
மனதுகள் குளிர்கின்றன ஆ…….ஆ……ஆ…….ஆ….ஆ……

பெண் : வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை

பெண் : இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்
அதுவே சுகமாய்விடும்………
இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்
அதுவே சுகமாய்விடும்………
இன்பமோ துன்பமோ வெளியினில் இல்லை
இதயத்தில் உருவாய்விடும்……

பெண் : மங்கலம் குறையாமல் மஞ்சளும் அழியாமல்
வாழ்வது நலமல்லவா……..
மணவினை நாளன்று வேதியர் பலர் சொல்லும்
மந்திரம் அதுவல்லவா ஆ…….ஆ……..ஆ…….ஆ……
மந்திரம் அதுவல்லவா ஆ……..ஆ…….ஆ……..

பெண் : வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here