Singer : P. S. Govindhan

Music by : C. N. Pandurangan

Male : Vaazhvadhilum nalam
Soozhvadhilum puvi
Makkalellaam oppudaiyaar
Vaazhvadhilum nalam
Soozhvadhilum puvi
Makkalellaam oppudaiyaar

Male : Ezhmaiyil makkalai thalluvadho
Idhai inbamena silar kolluvadho
Ezhmaiyil makkalai thalluvadho
Idhai inbamena silar kolluvadho

Male : Koozhukku parpalar vaadavum
Sirchilar kollaiyadippadhuvum needhiyo
Oooo…ooooo….
Koozhukku parpalar vaadavum
Sirchilar kollaiyadippadhuvum needhiyo
Puvi vaazhvadhu thaan endha thaedhiyo
Puvi vaazhvadhu thaan endha thaedhiyo

Male : Sirchilar vaazhndhida
Parpalar uzhaithu theerga
Enum indha logamae
Sirchilar vaazhndhida
Parpalar uzhaithu theerga
Enum indha logamae
Uruvattrozhindhaalum nandraagumae

Male : Kaanbadhellaam thozhilaali seidhaan
Avan kaanathagundhadhu varumaiyo
Kaanbadhellaam thozhilaali seidhaan
Avan kaanathagundhadhu varumaiyo
Avan poonathagundhadhu porumaiyo

Male : Makkalellaam samamaaga adaindhida
Maanilam thandhadhil panjamo
Makkalellaam samamaaga adaindhida
Maanilam thandhadhil panjamo
Pasimikkavarin thogai konjamo
Pasimikkavarin thogai konjamo

பாடகர் : பி. எஸ். கோவிந்தன்

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

ஆண் : வாழ்வதிலும் நலம்
சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்
வாழ்வதிலும் நலம்
சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்

ஆண் : ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ
ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ)

ஆண் : கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளையடிப்பதுவும் நீதியோ
ஓஒஓ…ஓஒஓ
கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளையடிப்பதுவும் நீதியோ
புவி வாழ்வதுதான் எந்த தேதியோ
புவி வாழ்வதுதான் எந்த தேதியோ

ஆண் : சிற்சிலர் வாழ்ந்திட
பற்பலர் உழைத்துத் தீர்க
எனும் இந்த லோகமே
சிற்சிலர் வாழ்ந்திட
பற்பலர் உழைத்துத் தீர்க
எனும் இந்த லோகமே
உறுவற்றொழிந்தாலும் நன்றாகுமே

ஆண் : காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ
அவன் பூணத்தகுந்தது பொறுமையோ

ஆண் : மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மானிலம் தந்ததில் பஞ்சமோ
மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மானிலம் தந்ததில் பஞ்சமோ
பசிமிக்கவரின் தொகை கொஞ்சமோ
பசிமிக்கவரின் தொகை கொஞ்சமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here