Singer : Hariharan

Music by : Hariharan

Male : Vaazhvae sugam sugam
Vaanum mannum sugam sugam

Male : Vaazhvae sugam sugam
Vaanum mannum sugam sugam
Perandam sugam sugam
Piraviyin payanae sugam sugam

Male : Maadhavin anaippinill
Maarbaga veppam sugam sugam
Thaalattil isaiperum
Thaai mozhi chorkal sugam sugam

Male : Bhoomiyin nalangalai
Pulangalil nugardhal sugam sugam
Pulangalai kadandhadhai
Budhiyil unarndhal sugam sugam

Male : Eesan arulaal sugam sugam
Eesan aadhal sugam sugam
Iraimai enbadhu karaindhupoi
Iyarkaiyil izhaidhal sugam sugam

Male : Thavara ilaigalin thalaigalil
Thangiya mazhai thuli sugam sugam
Oru latcham nadhiyil kulithidum
Otrai suriyan sugam sugam

Chorus : Thavara ilaigalin thalaigalil
Thangiya mazhai thuli sugam sugam
Oru latcham nadhiyil kulithidum
Otrai suriyan sugam sugam

Male : Neela vaanil padinthidum
Niramatra nirangal sugam sugam
Neenda iravil kumizhvidum
Nisaptha idaiveli sugam sugam

Male : Kannorubal konjam mayanginal
Innoru paal thaan sugam sugam
Kaamam kadandha yogamae
Kaadhalin aridhal sugam sugam

Male : Thaerndha pin thelindha pin
Thirumanam kolvathu sugam sugam
Mudhal iravu enbadhu iruvarukkum
Mudhal mudhal aadhal sugam sugam

Male : Karuvuttra pennaal vaiyitrinai
Kanavan thadavudhal sugam sugam
Thagapan aakkiya manaivi mel
Thalaivan kanneer sugam sugam

Male : Thoongiya pillai soodhithu
Thunaiyai ezhupputhal sugam sugam
Mazhalaigal kudaikkul odhungida
Mazhaiyil nanaivadhu sugam sugam

Male : Vervaiyil eettiya arum porul
Nervazhi serthal sugam sugam
Naalaikku semitha perum porul
Ezhaikku vazhanguthal sugam sugam

Chorus : Vervaiyil eettiya arum porul
Nervazhi serthal sugam sugam
Naalaikku semitha perum porul
Ezhaikku vazhanguthal sugam sugam

Male : Gyanam ezhudhiya kodu pol
Naraiyondru vizhudhal sugam sugam
Vaazhkaiyin vilimbilae
Vaarthaigal kuraivadhu sugam sugam

Male : Patriya bandham patrugalai
Matrum aaruthal sugam sugam
Uyirum porulum ondrena
Unarndhu mudithal sugam sugam

Male : Andathil suzhalum anaithaiyum
Pindathil unarndhal sugam sugam
Pindathil thudikkum porulgalai
Andathil kalathal sugam sugam

Chorus : Andathil suzhalum anaithaiyum
Pindathil unarndhal sugam sugam
Pindathil thudikkum porulgalai
Andathil kalathal sugam sugam

Male : Neenda vaazhvin nigazhvinai
Ninaivurum oru ganam sugam sugam
Thazhndha ninaivin sangili
Arupadum maruganam sugam sugam

Male : Yasithu padiyae kuyilgayil
Yaathirai mudithal sugam sugam
Nesitha uyirin karangalil
Nimmadhi perudhal sugam sugam
Nesitha uyirin karangalil
Nimmadhi perudhal sugam sugam
Nimmadhi perudhal sugam sugam

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : ஹரிஹரன்

ஆண் : வாழ்வே சுகம் சுகம்
வானும் மண்ணும் சுகம் சுகம்

ஆண் : வாழ்வே சுகம் சுகம்
வானும் மண்ணும் சுகம் சுகம்
பேரண்டம் சுகம் சுகம்
பிறவியின் பயனே சுகம் சுகம்

ஆண் : மாதாவின் அணைப்பினில்
மார்பக வெப்பம் சுகம் சுகம்
தாலாட்டில் இசைபெறும்
தாய்மொழிச் சொற்கள் சுகம் சுகம்

ஆண் : பூமியின் நலன்களைப்
புலன்களில் நுகர்தல் சுகம் சுகம்
புலன்களைக் கடந்ததை
புத்தியில் உணர்தல் சுகம் சுகம்

ஆண் : ஈசன் அருளா சுகம் சுகம்
ஈசன் ஆதல் சுகம் சுகம்
இறைமை என்பது கரைந்துபோய்
இயற்கையில் இழைதல் சுகம் சுகம்

ஆண் : தாவர இலைகளின் தலைகளில்
தங்கிய மழைத்துளி சுகம் சுகம்
ஒருலட்சம் நதியில் குளித்திடும்
ஒற்றைச் சூரியன் சுகம் சுகம்

குழு : தாவர இலைகளின் தலைகளில்
தங்கிய மழைத்துளி சுகம் சுகம்
ஒருலட்சம் நதியில் குளித்திடும்
ஒற்றைச் சூரியன் சுகம் சுகம்

ஆண் : நீல வானில் படிந்திடும்
நிறமற்ற நிறங்கள் சுகம் சுகம்
நீண்ட இரவில் குமிழ்விடும்
நிசப்த இடைவெளி சுகம் சுகம்

ஆண் : கண்ணொருபால் கொஞ்சம் மயங்கினால்
இன்னொரு பால்தான் சுகம் சுகம்
காமம் கடந்த யோகமே
காதலென் றறிதல் சுகம் சுகம்

ஆண் : தேர்ந்தபின் தெளிந்தபின்
திருமணம் கொள்வது சுகம் சுகம்
முதலிர வென்பது இருவருக்கும்
முதல் முதல் ஆதல் சுகம் சுகம்

ஆண் : கருவுற்ற பெண்ணாள் வயிற்றினைத்
கணவன் தடவுதல் சுகம் சுகம்
தகப்பன் ஆக்கிய மனைவிமேல்
தலைவன் கண்ணீர் சுகம் சுகம்

ஆண் : தூங்கிய பிள்ளையைச் சோதித்துத்
துணையை எழுப்புதல் சுகம் சுகம்
மழலைகள் குடைக்குள் ஒதுங்கிட
மழையில் நனைவது சுகம் சுகம்

ஆண் : வேர்வையில் ஈட்டிய அரும்பொருள்
நேர்வழி சேர்த்தல் சுகம் சுகம்
நாளைக்குச் சேமித்த பெரும்பொருள்
ஏழைக்கு வழங்குதல் சுகம் சுகம்

குழு : வேர்வையில் ஈட்டிய அரும்பொருள்
நேர்வழி சேர்த்தல் சுகம் சுகம்
நாளைக்குச் சேமித்த பெரும்பொருள்
ஏழைக்கு வழங்குதல் சுகம் சுகம்

ஆண் : ஞானம் எழுதிய கோடுபோல்
நரையொன்று விழுதல் சுகம் சுகம்
வாழ்க்கையின் விளிம்பிலே
வார்த்தைகள் குறைவது சுகம் சுகம்

ஆண் : பற்றிய பந்தம் பற்றுகளை
முற்றும் அறுத்தல் சுகம் சுகம்
உயிரும் பொருளும் ஒன்றென
உணர்ந்து முடித்தல் சுகம் சுகம்

ஆண் : அண்டத்தில் சுழலும் அனைத்தையும்
பிண்டத்தில் உணர்தல் சுகம் சுகம்
பிண்டத்தில் துடிக்கும் பொருள்களை
அண்டத்தில் கலத்தல் சுகம் சுகம்

குழு : அண்டத்தில் சுழலும் அனைத்தையும்
பிண்டத்தில் உணர்தல் சுகம் சுகம்
பிண்டத்தில் துடிக்கும் பொருள்களை
அண்டத்தில் கலத்தல் சுகம் சுகம்

ஆண் : நீண்ட வாழ்வின் நிகழ்வினை
நினைவுறும் ஒருகணம் சுகம் சுகம்
ஆழ்ந்த நினைவின் சங்கிலி
அறுபடும் மறுகணம் சுகம் சுகம்

ஆண் : யாசித்த படியே துயில்கையில்
யாத்திரை முடிதல் சுகம் சுகம்
நேசித்த உயிரின் கரங்களில்
நிம்மதி பெறுதல் சுகம் சுகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here