Singer : Vani Jairam and Balamuralikrishna
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Vada dhisaiyil sila vaigunthangal
Thiru madavan vaazhum thiru thalangal
Kadalenum bakthiyil uyirinangal
Dhinam kannanai seivikkum arul manangal
Female : Pandaripuramennum ponnulagam
Engal paranthaaman kanda thani ulagam
Pandaripuramennum ponnulagam
Engal paranthaaman kanda thani ulagam
Female : Kandu kondaar avar kangalilae
Avan karunai piranthathu idhayaththilae
Kandu kondaar avar kangalilae
Avan karunai piranthathu idhayaththilae
Male : Kannan pirantha siraisaalai
Aa…aa…aa…aa…aah….aa…aa…aa….
Kannan pirantha siraisaalai
Avan kaaviyam paadiya kulir cholai
Vannam nirainthathu sirikkuthammaa
Intha maduraa nagaram azhaikkuthammaa
Female : Kasi endraalae namai marappom
Antha harichandran kadhaithanai ninippom
Kasi endraalae namai marappom
Antha hairchandhiran kadhaithanai ninaippom
Female : Aasigal puriyuthu gangai nadhi
Antha alaiyinil moozhguvathu manithavithi
Aasigal puriyuthu gangai nadhi
Antha alaiyinil moozhguvathu manithavithi
Male : Gangaiyil orunaal kuliththuvittaal
Entha kaakkaiyum yaanaiyin palam perumaam
Angae avargal kuliththezhunthaar
Antha anantha layaththil thamai maranthaar
Female : Saththiya naarayanan koyil
Raman sannathi kaattum thirukkoyil
Aththanaiyum avar paarththa pinnae
Annai annapoorani viduvaalaa
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பாலமுரளிகிருஷ்ணா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : வடதிசையில் சில வைகுந்தங்கள்
திரு மாதவன் வாழும் திருத் தலங்கள்
கடலெனும் பக்தியில் உயிரினங்கள்
தினம் கண்ணனை செவிக்கும் அருள் மனங்கள்
பெண் : பண்டரிபுரமென்னும் பொன்னுலகம்
எங்கள் பரந்தாமன் கண்ட தனி உலகம்
பண்டரிபுரமென்னும் பொன்னுலகம்
எங்கள் பரந்தாமன் கண்ட தனி உலகம்
பெண் : கண்டு கொண்டார் அவர் கண்களிலே
அவன் கருணை பிறந்தது இதயத்திலே…
கண்டு கொண்டார் அவர் கண்களிலே
அவன் கருணை பிறந்தது இதயத்திலே…
ஆண் : கண்ணன் பிறந்த சிறைச்சாலை
ஆ…ஆ…ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆ….
கண்ணன் பிறந்த சிறைச்சாலை
அவன் காவியம் பாடிய குளிர்ச்சோலை
வண்ணம் நிறைந்தது சிரிக்குதம்மா
இந்த மதுரா நகரம் அழைக்குதம்மா
பெண் : காசி என்றாலே நமை மறப்போம்
அந்த ஹரிச்சந்திரன் கதைதனை நினைப்போம்
காசி என்றாலே நமை மறப்போம்
அந்த ஹரிச்சந்திரன் கதைதனை நினைப்போம்
பெண் : ஆசிகள் புரியுது கங்கை நதி
அந்த அலையினில் மூழ்குவது மனிதவிதி…..
ஆசிகள் புரியுது கங்கை நதி
அந்த அலையினில் மூழ்குவது மனிதவிதி…..
ஆண் : கங்கையில் ஒருநாள் குளித்துவிட்டாள்
எந்தக் காக்கையும் யானையின் பலம் பெறுமாம்
அங்கே அவர்கள் குளித்தெழுந்தார்
அந்த ஆனந்த லயத்தில் தமை மறந்தார்…..
பெண் : சத்திய நாராயணன் கோயில்
ராமன் சன்னதி காட்டும் திருக்கோயில்
அத்தனையும் அவர் பார்த்த பின்னே
அன்னை அன்னபூரணி விடுவாளா
ஆண் : இமயப் பெருமலை அடிவாரம்
இங்கு இந்துக்கள் வணங்கும் ரிஷிகேஷம்
இமயப் பெருமலை அடிவாரம்
இங்கு இந்துக்கள் வணங்கும் ரிஷிகேஷம்
ஆண் : சமயம் வளர்ந்த இடம் இதுதான்
நம் தத்துவம் நடந்த தடம் இதுதான்
தத்துவம் நடந்த தடம் இதுதான்
பெண் : புத்தன் பிறந்தது நேபாளம்
இந்து புனிதம் அடைந்ததும் நேபாளம்
ஆண் : சத்தியம் பாடுது பூபாளம்
இந்து சமயத்தில் கோயில்கள் ஏராளம்
சத்தியம் பாடுது பூபாளம்
இந்து சமயத்தில் கோயில்கள் ஏராளம்
பெண் : கிருஷ்ண மந்திர் என ஊரறியும்
எங்கள் கேசவன் வாழும் இடம் இதுதான்
உஷ்ணம் தணிந்திட நீரினிலே
அவன் உறக்கம் கொள்ளும் தலம் இதுதான்
இருவர் : ஜலநாராயணன் கோயிலிலே
அவர் தம்மை மறந்தே பணிந்து நின்றார்
ஜலநாராயணன் கோயிலிலே
அவர் தம்மை மறந்தே பணிந்து நின்றார்
குழு : நாராயணா……ஹரிஹரி நாராயணா….
இருவர் : பலமுறை பாதம் பணிந்த பின்னே
அவர் மலைவாழ் கண்ணனை நெருங்குகின்றார்
குழு : நாராயணா… ஹரிஹரி நாராயணா….
இருவர் : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
குழு : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
இருவர் : நாராயணா என நீ விழுந்தால்
அந்த நல்லவன் கைகள் தூக்கி விடும்
நல்லவன் கைகள் தூக்கி விடும்
குழு : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……
ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……
ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……