Singer : Hariharan

Music by : Ilayaraja

Male : {Vaigai nadhi karai
Chinna manikuyilae
Vaadi nirpadhenna
Solladi pon mayilae} (2)

Male : Kangal kalangaadhae
Nenjam mayangaadhae
Inghae uravundu
Endrum marakaadhae
Ezhai eliyorai thaan
Bhoomi thaangaadhaa

Male : Vaigai nadhi karai
Chinna manikuyilae
Vaadi nirpadhenna
Solladi pon mayilae

Male : Thunba mazhai thannai thaangum siru kudai
Naan aaven
Venil anal thannil thaagham thanithidum
Neer aaven
Poghum vazhi enghum unnai thodarndhidum
Kaatraaven
Sogham varugayil thunbam thudaithidum
Paattaaven

Male : Yen indha vaazhkai endru
Yengugindra ezhai inghu orr kodi
Yaarukinghae sogham illai
Yaar manadhil bhaaram illai yammaadi
Nalla naatkkal namakirukku
Andha nambikkaithaan vandhu vittaal
Sogham illai..

Male : Vaigai nadhi karai
Chinna manikuyilae
Vaadi nirpadhenna
Solladi pon mayilae

Male : Nenjam ganathidum
Enna sumaigalai thaangaadhae
Indha ulagathai paarka vendum
Endru yengaadhae
Karpanai kottaigal kattum pechukalai
Kaadhil vaanghaadhae
Ottai kudisayil inbam illai
Ena ennaadhae

Male : Ezhaikoru ezhai thunai
Evvuyirkkum deivam thunai pon maanae
Nenjil oru vanjam illai
Nesathirku panjam illai vinmeenae
Nalla vaazhkai vandhu theerum
Varavillai endraal deivangal thaan
Poi adiyo …

Male : Vaigai nadhi karai
Chinna manikuyilae…yeheah..yehyeah..
Vaadi nirpadhenna
Solladi pon mayilae

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { வைகை நதி கரை
சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன
சொல்லடி பொன் மயிலே } (2)

ஆண் : கண்கள் கலங்காதே
நெஞ்சம் மயங்காதே இங்கே
உறவுண்டு என்றும் மறக்காதே
ஏழை எளியோரை தான் பூமி
தாங்காதா

ஆண் : வைகை நதி கரை
சின்ன மணிக்குயிலே வாடி
நிற்பதென்ன சொல்லடி
பொன் மயிலே

ஆண் : துன்ப மழை தன்னை
தாங்கும் சிறு குடை நான்
ஆவேன் வேனில் அனல்
தன்னில் தாகம் தனித்திடும்
நீர் ஆவேன் போகும் வழி
எங்கும் உன்னை தொடர்ந்திடும்
காற்றாவேன் சோகம் வருகையில்
துன்பம் துடைத்திடும் பாட்டாவேன்

ஆண் : ஏன் இந்த வாழ்க்கை
என்று ஏங்குகின்ற ஏழை இங்கு
ஓர் கோடி யாருக்கிங்கே சோகம்
இல்லை யார் மனதில் பாரம்
இல்லை யம்மாடி நல்ல நாட்கள்
நமக்கிருக்கு அந்த நம்பிக்கைதான்
வந்து விட்டால் சோகம் இல்லை

ஆண் : வைகை நதி கரை
சின்ன மணிக்குயிலே வாடி
நிற்பதென்ன சொல்லடி
பொன் மயிலே

ஆண் : நெஞ்சம் கனத்திடும்
என்ன சுமைகளை தாங்காதே
இந்த உலகத்தை பார்க்க வேண்டும்
என்று ஏங்காதே கற்பனை
கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை
காதில் வாங்காதே ஓட்டை குடிசையில்
இன்பம் இல்லை என எண்ணாதே

ஆண் : ஏழைக்கொரு ஏழை
துணை எவ்வுயிர்க்கும்
தெய்வம் துணை பொன்
மானே நெஞ்சில் ஒரு வஞ்சம்
இல்லை நேசத்திற்கு பஞ்சம்
இல்லை விண்மீனே நல்ல
வாழ்க்கை வந்து தீரும்
வரவில்லை என்றால்
தெய்வங்கள் தான் பொய்
அடியோ

ஆண் : வைகை நதி கரை
சின்ன மணிக்குயிலே
யேஹே யேயே வாடி
நிற்பதென்ன சொல்லடி
பொன் மயிலே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here